2ஜி கணக்கு?
2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்கான இரண்டாம் கட்ட ஏலத்தின் மூலம், மத்திய அரசுக்கு, 3,639 கோடி ரூபாய் மட்டும் கிடைக்கும் எனத் தெரிகிறது. மும்பை, உ.பி., கிழக்கு பகுதி ஆகிய மண்டலங்களுக்கான ஏலத்துக்கு, யாருமே விண்ணப்பிக்க வில்லை. "2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில்ரூ 1,80,000கோடிகள் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட உரிமங்களுக்கு பதிலாக, புதிய உரிமங்கள் வழங்குவதற்கு, மறு ஏலம் நடத்தும்படியும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதன்படி, ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்துக்கான சேவையை வழங்குவதற்கு, கடந்தாண்டு நவம்பரில் ஏலம் விடப்பட்டது. இதில், அரசு எதிர்பார்த்த வருவாயை விட, மிக குறைவாக, 9,407 கோடி ரூபாய் மட்டும் கிடைத்தது. அதேநேரத்தில், சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்துக்கான சேவையை வழங்கும் ஏலத்துக்கான அடிப்படை விலை, அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த ஏலத்தில், எந்த நிறுவனமும் பங்கேற்கவில்லை.இதையடுத்து, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஏல தொக...