மீள் பார்வை
2012-ம் ,ஆண்டு ஜூன் , ----------------------------------------------------- உலகம் ஜூன் 1: எகிப்தில் 31 ஆண்டுகளாக அமலில் இருந்த அவசர சட்டம் முடிவுக்கு வந்தது. ஜூன் 3: நைஜீரியாவின் அபுஜா நகரில் இருந்து, லாகோஸ் நகருக்கு சென்ற டானா ஏர்லைன்ஸ் விமானம் தீ விபத்துக்குள்ளானதில் 153 பேர் பலி. ஜூன் 4: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், 5.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜூன் 6: ஆப்கானிஸ்தானின் காந்தகார் பகுதியில், தற்கொலை படையினர் நடத்திய 2 தாக்குதல்களில் 41 பேர் பலி. ஜூன் 13: இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் டேனியல் ஹில்லெல், 2012ம் ஆண்டுக்கான உலக உணவு பரிசை பெற்றார். ஜூன் 18: இந்திய வம்சாவளி அமெரிக்க பேராசிரியர் அஞ்சலி ஜெயினுக்கு, அமெரிக்காவின் யேல் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம், அசோசியேட் டீன் பதவி வழங்கியது. ஜூன் 20: கிரீஸ் நாட்டின் புதிய பிரதமராக ஆன்டனிஸ் சமரா பதவியேற்பு. ஜுன் 24: பராகுவே அதிபர் பெர்னான்டோ லுகோ மீது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் பதவி நீக்கம். புதிய அதிபராக, பிரடரிக்கோ பிரான்கோ பதவி ஏற்பு. ஜூன் 27: வங்கதேசத்தில் பலத்த மழையினால் பல இடங்களி...