இடுகைகள்

வேங்கைவயல்.அரிட்டாபட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடந்தது என்ன?

படம்
மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் நாயக்கர்பட்டியை மையமாகக் கொண்டு ஒன்றிய  அரசு கடந்த நவம்பர் மாதம் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது.  மேலும், அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி, வல்லாளபட்டி, தெற்குத்தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய, சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில், டிசம்பர் 9-ம் தேதி தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது.அதில் முதல்வர் ஸ்டாலின் தான் முதல்வராக இருக்கும்வரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன் என உறுதியளித்தார் .   அதற்கு பிறகும்  ஒன்றிய  அரசு, தமிழ்நாடு அரசால் 'பல்லுயிர்ச் சூழல் மண்டலமாக' அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டிக்கு உட்பட்ட 500 ஏக்கரைத் தவிர்த்து, பிற இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தது.தமிழ்நாடு அரசு அதையும் கடுமையாக எதிர்த்தது...