விலையில்லா கைபேசி-மதியில்லா மத்தியரசு
இலவசமாக மிதி வண்டி கொடுத்தாயிற்று.இலவச சீருடை,விலையில்லா மின் விசிறி,மிக்சி,முதல் நாப்கின் வரை கொடுத்தாயிற்று, மன்மோகன் சிங்கும்,சோனியாவும் அடுத்ததாக என்ன கொடுக்கலாம் என்று மண்டையை உடைத்து இப்போது கை பேசியை அதாங்க செல் பேசியை கொடுக்க முடிவு செய்துள்ளதாக கைபேசி வழியே ஒரு செய்தி உலவுகிறது. அது பற்றி இந்த விடுதலை நாள் விழாவில் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று கோடி பேருக்கு, 7,000 கோடி ரூபாய் செலவில், இலவசமாக அல்லது விலையற்ற செல்பேசி வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில். 90 கோடி பேருக்கு மேல், கைபேசி வைத்துள்ளனர். தினமும் அதன் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், வறுமைக் கோட்டிற்கு[?] கீழே வாழும் குடும்பங்களில், கைபேசி இல்லாமல் துன்பத்தில் வாடுவது மத்திய அரசைமிகவும் வாட்டியுள்ளது. நீதிமன்றம் கூறியும் உணவுதானியங்களை,அதுவும் அரசு கிடங்கில் எலிகளால் வீணாகும் தாணியங்களை இலவசமாக கொடுக்க மறுத்த மத்திய அரசு இப்போது கைபேசியை இலவசமாக கொடுக்க திட்டமிடுவது எங்கே...