இடுகைகள்

பணக்காரர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகின் முதல் பணக்காரர்

படம்
சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் முதல் பணக்காரர் என்ற இடத்தை  மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் மீண்டும் பிடித்துள்ளார். பில்கேட்ஸ்[வயது -57] கடந்த 2007-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து உலகின் முதல் பணக்காரராக இருந்து வந்தார்.  அதன்பின், அவரது இடத்தை மெக்சிகோவைச் சேர்ந்த முதலீடு மற்றும் தொலைபேசி நிறுவன அதிபர் கார்லஸ் ஸ்லிம் [வயது-73]பிடித்தார்.இவரின் தொலைபேசி நிறுவன ஆதிக்கத்தைக் கண்டும் அதன் மூலம் கணக்கின்றி பணம் குவித்துக்கொண்டிருப்பதை தடுக்கும் வண்ணம்  மெக்சிகோ நாடாளுமன்றத்தில்  சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால கார்லஸ்  நிறுவனத்தின் பங்கு 14 சதவீதம் சரிந்தது .மொத்த சொத்து மதிப்பில்  16,200 கோடி ரூபாய் குறைந்துள்ளது. அதற்கு பதில்  பில்கேட்சின் மைக்ரோசாஃப்ட் நிறுவன பங்கு மதிப்பு கடந்த ஆண்டில் 16 சதவீதம் அதிகரித்தது. அவரது சொத்து மதிப்பு 3,99,000 கோடியாக உயர்ந்துள்ளது. இ தனால்,கார்லஸ் ஸ்லிம்மின் சொத்து மதிப்பை பின்தள்ளி, பில் கேட்ஸ், உலகின் முதல் பணக்காரர் என்ற விட்ட இடத்தை  பிடித்து விட்டார். ...