பிணந்தின்னி பா.ஜ.க. ! பணந்தின்னி அ.தி.மு.க. !!
க டந்த நூறாண்டுகளில் காணப்படாத வறட்சியில் சிக்கி, தமிழகமே பாலைவனம் போலாகிவிட்டது. மாநிலம் முழுவதும் தை பட்ட விவசாய சாகுபடி பொய்த்துப் போய், ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்துகொண்டும் இறந்து போனார்கள். வறட்சியால் விவசாயத்தின் துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பும் பாழ்பட்டு, ஆடு – மாடுகளை வந்த விலைக்கு விவசாயிகள் தள்ளிவிடுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. விவசாயம் பொய்த்துப் போனதால் வேலையில்லா திண்டாட்டம், குடிநீர்கூட இல்லாத அவல நிலைமை என்ற இரண்டு தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், கிராமப்புற மக்கள் ஊரைக் காலிசெய்துவிட்டு நகரங்களை நோக்கி அகதிகளாக ஓடிவரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனினும், இந்த வறட்சி தமிழக விவசாயிகளின், தமிழக மக்களின் போராட்டக் குணத்தை வற்றச் செய்துவிடவில்லை. கோவை மாவட்டம், சூலூர் ரோடு, ராவுத்தர் பிரிவு பகுதியில் தண்ணீரின்றிப் பட்டுப்போய் நிற்கும் தென்னை மரங்கள் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திவரும் போராட்டம் ஒரு மாதத்...