மருந்துகள்....... பிரச்னைகள்.....
நல்ல மருந்து கசக்கத்தான் செய்யும்! நீரிழிவு, இதயநோய்கள் போன்றவற்றைக் கட்டுப்பாடாக வைக்கவும், பின்விளைவுகளைக் குறைக்கவும் உதவக்கூடிய ஏராளமான மருந்துகள் இப்போது கிடைக்கின்றன. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவையையும் இம்மருந்துகளே குறைக்கின்றன. வாழ்க்கை முழுக்கவே சிகிச்சை பெற வேண்டிய ஒரு குறைபாடாகவே நீரிழிவு உள்ளது. சில நீரிழிவாளர்களுக்கு உணவுக்கட்டுப்பாடும் முறையான உடற்பயிற்சியும் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. ஆனால், பலருக்கு மருந்துகள் இல்லாமல் நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே நிலவுகிறது. இந்த மருந்துகள் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? டாக்டரிடம் தயக்கமில்லாமல் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மருத்துவர் அளிக்கிற ப்ரிஸ்க்ரிப்ஷனை அப்படியே மருந்துக்கடையில் கொடுத்து மாத்திரைகள் வாங்கி கண்ணை மூடிக்கொண்டு விழுங்க வேண்டிய அவசியமில்லை. மருத்துவரிடம் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பற்றி விளக்கமாகக் கேட்டு தெளிவடைய வேண்டியது அவசியம். நீரிழிவுக்காக அளிக்கப்படும் மருந்துகளைத் தவறாது எடுத்துக்கொண்டாலே பல பிரச்னைகளைத...