இடுகைகள்

ஒவ்வாமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூச்சி கடி... ஒவ்வாமை

படம்
எறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம்  கடிபட்டவர்களுக்கு  ஒவ்வாமை  உண்டாக்க வாய்ப்புகள் உள்ளன. , ஆரம்ப நிலையில் கடிபட்ட இடத்தில் தோல் அரிக்கும்.  மற்ற இடங்களுக்கு விஷத்தன்மை பரவும்போது தோல் சிவக்கும், தடிக்கும், லேசாக வலிக்கும். காய்ச்சல் வரும்.  இரண்டாம் நிலையில் அரிப்பும் வீக்கமும் இருக்கும்.  கடிபட்ட இடம் மட்டுமல்லாமல் கண் இமைகள், காது மடல்கள், உதடு போன்ற இடங்களில் நீர் கோர்த்து வீக்கங்கள் ஏற்படும். பொதுவாக இது போன்ற விஷ கொடுக்குள்ள பூச்சி கடித்தவுடன் மற்ற இடங்களுக்கு விஷத்தன்மை பரவாமல் தடுப்பதற்காக உடலிலுள்ள ரத்தக்குழாய்கள் சுருங்குகின்றன.  இதனால் இதயம், மற்றும் மூளை போன்ற உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறது.  இதனால் சிலருக்கு மயக்கம் வரலாம் . கடுமையான தலைவலி, வாந்தி, தொண்டை வறண்டு அடைக்கும், பூச்சியின் விஷத்தன்மை கடுமையாக இருந்தால் மூச்சு விடுவது சிரமமாக இருக்கும்.  மயக்கம் ஏற்படும்.  இந்நிலையில் சிலரின்  ...