டெங்கு காய்ச்சல் புரியும்.அதை கவனி அரசே..
கமல்ஹாசன் அமைச்சர்களையும்,ஊழலையும் கலாய்த்துக்கொண்டிருக்கையில் திடீரென டெங்கு காய்ச்சலை பற்றியும் அதை அரசு ஒழிக்க வேண்டும் அல்லது நகர்ந்து தொலைக்க வேண்டும் என்றது, சம்பந்தமில்லா டுவிட்டாக அப்போது தெரிந்தது. ஆனால் கமல் எதையும் மிகவும் யோசித்தே சொல்பவர். சுனாமியை பற்றியும் கூட நாம் சுனாமியை சந்திக்கும் முன்னரே அன்பே சிவத்தில் விவரித்தவர்.அவர். எனவே தமிழகத்தில் டெங்கு என்று நாம் ஆய்ந்த பொது கிடைத்தவை பகீர் . டெங்கு பற்றிய கமல்ஹாசன் எச்சரிக்கை அரசு தவிர்க்க முடியாதது.மக்கள் உயிர் சார்ந்தது.ஊழல் ஆதாரம் கமலிடம் கேட்டு பொழுதைப்போக்குவது போல் எளிதில் பாஜக ,மத்திய அரசு உதவியுடன் கடந்து விட முடியாதது. தமிழகத்தில், 'டெங்கு' பாதிப்பு வேகமாக பரவி வரும் சூழலில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய மிக அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அத்துறை அமைச்சரோ டெங்கு தீவிரம் தெரியாமல் அதை மறைக்க "டெங்கு இல்லை மர்ம காய்ச்சல்" என்று அறிவித்துக்கொண்டு தனது வருமான வரை வழக்கத்தில் இருந்து தப்பிப்பதில் தான் முழுக்கவனம் செலுத்துகிறார்.டெங்கு தடுப்பில் அல்ல...