இடுகைகள்

முதுகு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதுகு வலி! கழுத்து வலி !!

படம்
பொதுவாக நாற்பது வயதிற்கு மேல்  முதுகு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்படும்.  இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என் சொல்வார்கள்.  நாம் அனைவரும் அறிந்தது போலே எலும்புக்கு வலு சேர்ப்பது கால்சியம் என்னும் தாதுச்சத்து தான்.  உடலில் கால்சியம் அளவு குறையும் போது, எலும்புகள் வலுவிழந்து தேய்மானம் ஏற்படும். கால்சியம் எலும்புகளை பலப்படுத்தும் என்று பெரும்பாலான மக்கள் அறிவர். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புப்புரை என்னும் நோயாகும்.  இந்த நோயானது எலும்பை உருக்கி எலும்பு முறிவை ஏற்படுத்துவதோடு, கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தி காலப்போக்கில் உயரம் 6 அங்குலம் வரையில் குறைய வழி செய்துவிடும். இந்நோயில் எளிதில் ஏற்படும் எலும்பு முறிவின் ஆபத்து இருப்பதனால், இது குறிப்பாக ஆயுள் எதிர்பார்ப்பு மற்றும் வாழ்க்கை முறையை பாதிக்கலாம். ஆயினும் இத்தகைய நோயை தடுக்க பல வழிகள் உள்ளன. ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் எலும்புப்புரை நோய் வரக்கூடும். ஆயினும் இது பெண்களுக்கு தான் அதிக அளவில் வருகிறது. குறிப்பாக இறுதி மாதவிடாய் நிலையை அடைந்த பெண்களிடையே அதிகளவில் காணப்படுக...