பட்டினியின் பிடியில் ....,,
பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் பாகிஸ்தானோடு போர்த்தொடுக்கஇந்தியா தயாராக இருப்பதாக சவால்விட்டார். போர்ப் பதற்றத்திற்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டனர். மறுபுறம் வறுமையின் சுழலிலிருந்து மீள முடியாத நிலையில் இந்திய மக்கள் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.இந்நிலையில், உலக பட்டினி குறியீடு - 2016 ஆய்வினை சர்வதேச உணவுக் கொள்கைஆய்வு நிறுவனம் (IFPRI) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் நிலையை விட மிகவும் கீழான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதும் தெரியவருகிறது. 5 வயதிற்கு உட்பட்ட இந்திய குழந்தைகளின் உயரத்திற்கும், எடைக்கும் சம்பந்தமேஇல்லாத அளவிற்கு 15 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளதாகவும் அறிக்கை கூறுகின்றது. பாகிஸ்தானோடு ஒப்பிடும்போது 10 சதவீத குழந்தைகளே வளர்ச்சி குன்றியுள்ள குழந்தைகளாக உள்ளனர். வெளிவந்துள்ள ஆய்வு முடிவுகள் இந்தியாவின் மிக மோசமான நிலையை வெளிப்படுத்தியுள்ளன. பெனின், தோகோ, நைஜீரியா, உகாண்டா மற்றும் காம்பியா ஆகிய சிறிய நாடுகளை விடவும் கீழானநிலையில...