"2,00,000"

இன்று என்னை பொறுத்தவரை முக்கிய நாள். " சுரன் "வலைப்பக்கம் துவக்கி இடுகைகள் இட ஆரம்பித்தப்பின்னர் இந்த பக்கம் வந்து சென்றவர்கள்.எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்டியுள்ளது. இரணடு லட்சம்பேர்களாக வந்திருக்க வாய்ப்பில்லை.இதில் பலர் பலமுற்றை திருப்பி வந்து சென்றவர்களாகவே இருப்பார்கள். வந்து சென்ற அனைவருமே பக்கத்தை -இடுகையை படித்து சென்றவர்களாக இருப்பார்கள் என்றும் சொல்லுவதற்கில்லை. இடுகை பிடித்தவர்களும் இருக்கலாம்.என்ன இடுகை இது என்று வெறுத்துப்பொனவர்களும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும்,எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் வந்து எண்ணிக்கையை 2,00,000 ஆக்கி சென்ற அனைவர்களுக்கும் எனது நன்றி. இந்த எண்ணிக்கை இடுகையை படித்தவர்களாக -விரும்பியவர்களாக இருப்பார்களேயானால் இன்னமும் மகிழ்ச்சி அடைபவனாக இருப்பேன். எனது எண்ணங்களையே பதிவதினாலும்,செய்திகள் ஏற்படுத்திய தாக்கங்களே இடுகைகளாக இருந்ததினாலுமே மற்றவர்கள் கருத்தை சொல்லும் வழியை எடுத்து விட்டேன்.காரணம் அவர்கள் கருத்து என்னை பாதித்து விடக்கூடாது.அவர்களுக்கு பதில் சொல்லி நான் சொல்லவந்தது மாறிவிடக்கூடாது என்ற பயம்தான்.மேலும் ...