கச்சா எண்ணெய்
உலக பெட்ரோலிய சந்தையில் தற்போது ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 36 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு விலை சரிந்துள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் 11 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த அளவுக்கு எண்ணெய் விலை குறைந்துள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்ததைவிட தற்பொதைய விலை 20 சதவீதம் குறைவு. 2026 வரை கச்சா எண்ணை விலை 55 டாலர்கள் அளவுக்குத்தான் கூடி,குறைந்து கொண்டிருக்கும் என்பதுதான் கணிப்பு. அப்போது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அமைப்பான ஒபெக் நிறுவனம் உற்பத்தியை குறைப்பதற்கு எதிரான முடிவை எடுத்தனர். எண்ணெய் விநியோகத் தேவை குறைந்த போதிலும், உற்பத்தியை குறைக்க எண்ணை உற்பத்தியாளர்கள் இணங்கவில்லை. எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் இதன் மூலம் பலனடைந்துள்ளன என்றாலும், எண்ணை விற்கும் நாடுகளான நைஜீரியா, வெனிசுவேலா மற்றும் வளைகுடா நாடுகளில் இதனால் உள்நாட்டு வரவு செலவுத் திட்டத்தில் கடுமையான வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளன.பொருளாதார பாதிப்புகள் உண்டாகியுள்ளன. சரவதேச அளவில் எண்ணெய் விலைகளின் வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்படுவதற...