இடுகைகள்

கசாப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடனே தூக்கிலிடுங்கள்-1,372 கடிதங்கள்

படம்
கசாப்பை உடனே தூக்கிலிடுங்கள்' என, வலியுறுத்தி சமூக சேவகர் ஒருவர், கடந்த நான்கு ஆண்டுகளாக, ஜனாதிபதிக்கு ஒருநாள் விடாமல், கடிதங்கள் எழுதி வருகிறார். மும்பையில், 2008, நவம்பர் 26ம் தேதி, பயங்கரவாதிகள், 10 பேர் தாக்குதல் நடத்தினர். இதில், வெளிநாட்டவர்கள் சிலர் உட்பட, 166 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானிலிருந்து, கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்திய, இந்த பயங்கரவாதிகளில் ஒன்பது பேர், பாதுகாப்புப் படையினரால், சுட்டுக் கொல் லப்பட்டனர்.  அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் சிக்கினான்.மும்பை, ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவனுக்கு, அதே சிறையில், அமைக்கப்பட்ட சிறப்புக் கோர்ட், மரண தண்டனை விதித்தது. அந்த மரண தண்டனையை, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து, தனக்கு கருணை காட்டக்கோரி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, கசாப், கருணை மனு அனுப்பியுள்ளான். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தன் நெருங்கிய நண்பரை பறிகொடுத்த, சமூக சேவகர் நாராயண் பாட்டீல் என்பவர், "பயங்கரவாதி கசாப்பிற்கு உடனே தண்டனை கிடைக்கும்' என, நம்பினார். நாட்கள்தான் உருண்டோடின....

அஜ்மலுக்கு தினம் 2லட்சம் ,

படம்
                         மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தூக்குதண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப் வழக்கில் விசாரணைக்காக ஒரு நாள் ஒன்று ரூ. 2 லட்சம் மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான கசாப் கைது செய்யப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மும்பை எர்வாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அஜ்மல் கசாப் தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குதண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளான். இதற்காக வக்கீல் கட்டணம், அவரின் விமான கட்டணம் என தினசரி ரூ.2 லட்சம் வரை மகாராஷ்டிரா அரசு செலவிடுகிறது. இது குறித்து மகாராஷ்டிர அரசு சார்பில் ஆஜராகும் சிறப்பு வக்கீல் உஜ்வால் நிகாம், சுப்ரீம் கோர்டில் ஆஜராக டில்லி- மும்பை என முதல்தர வகுப்பில் விமானத்தில் செல்கிறார். இதற்காக மகாராஷ்டிரா அரசு ரூ. 50 ஆயிரம் விமான கட்டணமாக வழங்குகிறது.தவிர கூடுதலாக ரூ.10 ஆயிரம் இதர செலவுகளுக்காக வழங்கி வருவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி மகாராஷ்டிரா உள்த...