"உணவு பாதுகாப்பு சட்ட மசோதா: உள்நோக்கம். "
க டும் எதிர்ப்புகளுக்கும் தடைகளுக்கும் மத்தியில் உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுவிட்டது காங்கிரஸ் கூட்டணி அரசு. பொது விநியோக திட்டத்தின் மூலம் உணவு தானியங்களை மானிய விலையில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. இப்போதுள்ள நிலையில் ஒரு கிலோ அரிசியை மத்திய அரசு வெளிச்சந்தையில் 13 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, அதை மூன்று ரூபாய்க்கு மாநில அரசுகளுக்கு வழங்குகின்றது. அதை மாநில அரசுகள் தங்கள் வசதிக்கேற்ற விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் 20 கிலோ அரிசி இலவசம், கர்நாடகாவில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஆந்திராவில் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பதெல்லாம் அந்தந்த மாநில அரசுகளின் சலுகை திட்டங்கள். இப்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொதுவிநியோக திட்டத்தின் மூலம் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை இன்னும் விரிவுபடுத்தி வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கும் அவர்கள் வி...