என்றும் இளமை
உடலை என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் அற்புத சக்தி வேப்பிலையில் உள்ளது. கற்பமூலிகை என்றழைக்கப்படும் வேப்பிலைக்கு நரை, மூப்பு என்ற மூன்றையும் அணுக விடாமல் தடுக்கும் குணம் உண்டு. இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப்படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் பிருந்தே நம் மூதாதையர்கள் வேப்பிலையை உட்கொள்ளும் பொருளாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். அப்படி உபயோகிப்பதில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர். ஆனால், கருத்தரித்த தாய்மார்களும் கருத்தரிப்புக்காக காத்தி ருப்போரும் இதை உட்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளனர். 2005ம் ஆண்டு ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிவியல் ஆய்வறிக்கையில் வேப்பிலையின் மருத்துவக்குணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நோய் எதிர்ப்பு சக்திய...