இடுகைகள்

கைது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரம்,ரம்,...ஊரடங்கு ஆரம்பம்.

படம்
  "நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் இன்று(05.01.22) ஆளுநர் சட்டப் பேரவை. கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து பேசும்போது குறிப்பிட்டதாவது:-  " நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமமற்ற தளத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன; தொழிற் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றது என்ற அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம். அதேபோல், அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்கல்வி படிப்புகளிலும் ஓ.பி.சி.க்கு 27சதவீத இடஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப்பள்ளியில் படித்து 7.5சதவீத இடஒதுக்கீட்டில் தொழிற்படிப்பு சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணத்தை அரசே ஏற்கிறது. மேலும், அரசு பள்ளிகளை நவீனப்படுத்த 5 ஆண்டுகளில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பாக, 6,996 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள், கணினி கூடங்கள் அமைக்கப்படும். அதுமட்டுமல்லாது, இன்றைய காலத்துக்கு ஏற்ப பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். தமிழ்நாட்டுக்கென தகவல் தொழில்நுட்ப...

ஸ்டாலினும் கைது

படம்
                                           தி.மு.க, வின் பொருளாளரும்-முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினை இன்று காலை திருவாரூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காரணம் ,கைதாணை[வாரண்ட்] கேட்டபோது ஏதும் இல்லை எனக்கூறி யதுடன் பூண்டி கலைவாணனையும் அவருடன் கைது செய்து வேனில் ஏற்றி திருவாரூர் மாவட்டத்தில் எங்கே செல்கிறோம் எனக் கூறாமலே சுற்றிவருகின்றனராம். அவர்களைத்தொடர்ந்து தி.மு.க,வினரும்,பத்திரிகையாளர்களும் வாகனங்களில் சென்று கொண்டிருக்கிறார்கள்.திருவாருர் அல்லது மன்னார்குடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.  முன்னதாக 20 க்கும் மேற்பட்ட காவைதுறை வாகனங்களில் சுமார்300 காவலர்கள் வந்துள்ளனர்.மு.க.ஸ்டாலின் ஒரு படத்திறப்பு விழாவுக்கு காரில் சென்ற போது அவரின் காரில் மீது மோத வேகமாக வந்த காவல்துறை வாகனத்தைகண்டு ஸ்டாலின் கார் ஒட்டுநர் வண்டியை நிறுத்தியுள்ளார்.உடனே ஸ்டாலின்,பூண்டிகலைவாணன் ஆகிய இருவரையும் கைது செய்வதாக காவல் அலுவலர் கூறியதைத் தொடர்ந்து...