இடுகைகள்

நாகேஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாகேஷ் ஒருவரால்தான் முடியும்-

படம்
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் அல்ல, தமிழகத்தின் இணையில்லாத கலைஞர்களில் ஒருவர் அவர். நடமாடும் பிணமாக, நின்றபடி உடலை விறைத்துக்கொண்டு , உடலில் உயிர் இருப்பதையே மறைத்து நடிக்க நாகேஷ் ஒருவரால்தான் முடியும். கமலுடன் இணைந்து தொடங்கிய தனது இரண்டாவது இன்னிங்ஸில் நாகேஷ் ஜொலித்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தின் அந்த நகைச்சுவைக் காட்சியை ரசிக்காதவர்களும், அவரது உடல்மொழியைப் பார்த்து வியக்காதவர்களும் இருக்கவே முடியாது. `திருவிளையாடல்’ தருமி, `தில்லானா மோகனாம்பாள்’ வைத்தி, `காதலிக்க நேரமில்லை’ செல்லப்பா என்று அவர் நடித்த பாத்திரங்களை யாராலும் நகலெடுக்க முடியாது. நடனம், பாய்ச்சலான உடல்மொழி என்று பிற நகைச்சுவை நடிகர்கள் (சந்திரபாபு நீங்கலாக!) நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பிரதேசங்களில் கொடிநாட்டியவர். முகமெங்கும் அம்மைத் தழும்பு, ஒடிசலான உருவம், சற்று முறைத்த மாதிரியான பார்வை என்ற தோற்றம் கொண்ட நாகேஷை திரை நடிகராக இல்லாமல் சாதாரண சக மனிதராகக் கற்பனை செய்துபாருங்கள். சுள்ளென்று எரிந்துவிழுவாரோ என்று எண்ணி சற்றுத் தொலைவில் இருந்துதான் பேசியிருப்போம். ஆர்ப்பாட்டமான உடல் அசைவுகளும் உயர் ட...