இடுகைகள்

சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனியே தமிழ் "திரையுலக 100 விழா "?

படம்
 இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி: " சமீபத்தில் நடந்த சினிமா நூற்றாண்டு விழா வில் ஆந்திரா, தெலுங்கு, மலையாளம், கன்னட கலைஞர்களுக்கு மொத்தமாக அழைப்பிதழ் கொடுத்தார்கள்.  அவர்கள் தங்கள் கலைஞர்களுக்கு அதனை வணங்கி அனைவரையும பங்கேற்கச் செய்தார்கள்.  ஆனால் தமிழ் கலைஞர் களுக்கென்று தனி அழைப்பு இல்லை. அதனால் பெரும்பாலானோர் பங்கேற்க முடியவில்லை. திரைப்பட வர்த்தக சபை ஒன்றை தனியாக அமைக்க வேண்டும் என்று கூறிவந்தோம். அதன் அவசியத்தை சமீபத்திய விழாவில் உணர்ந்திருக்கிறோம்., இது யாருக்கும் எதிரானதல்ல. நமக்கு தேவையானது. " இயக்குனர் பார்த்திபன்:  "எங்கள் மண்ணின் இயக்குனர் பாரதிராஜா ஒரு ஞானகிறுக்கன். சினிமாவை தவிர அவருக்கு வேறெதுவும் தெரியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டவர், அவரை சினிமா நூற்றாண்டு விழாவில் கவுரவித்திருக்க வேண்டும். செய்யவில்லை. நம் மண்ணின் கலைஞனுக்கு நாமே விருது கொடுத்து கவுரவிப்போம்." இயக்குனர் பாரதிராஜா:  "எனக்கு அழைப்பு அனுப்பவில்லை,  கவுரவிக்கவில்லை என்று இங்கு வருத்தப்பட்டார்கள்.  தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பில்லையே என்ன செய்ய மு...

தமிழ் நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா?

படம்
இந்திய சினிமா 100 ஆண்டுகள் முடித்ததை இந்திய அரசு சார்பில் கொண்டாட இருக்கிறார்கள். அது மட்டுமல்ல செய்தி. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இம்மாதம் 25-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தில்லியில் கொண்டாடஅறிவிப்பு வெளியிட் டுள்ளது. அதில்  இந்திய மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்படுவதாகவும் அது தொடர்பாக விவாதங்களும் தொடர்ந்து நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கான  பட்டியல்  வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் இந்தி, வங்காளம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட  படங்கள் வரிசை தரப்பட்டுள்ளது. ஆனால், விழாவின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் திரைப்பட வெளியீடு குறித்தோ, விவாதங்கள் குறித்தோ எந்த விவரமும்இல்லவே  இல்லை. ஆக தமிழ் நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா?அங்கும் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகிறதா?என்ற கேள்வி எழுகிறது. ஈழத்தமிழர்கள் படுகொலையைத்தான் அடுத்த நாட்டு விவகாரம் என்று கூறிவரும் மத்திய அரசு இப்போது தமிழ் நாட்டையே வெளிநாடாக எண்ணுகிறதா? அல்லது ஒரு பொருட்டாகவே எண்ணவில்லையா என்ற கேள்வி எழுகி...

காமெடி விரதம்.

படம்
சேவை வரிக்கெதிராக திரையுலகினர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தில் கடைசி வரை கமல்ஹாச ன் பங்கேற்கவில்லை.  காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது.  மாலையில் கமல் வந்து உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார் என்று தெரிவித்தனர்.   மாலை 5 மணிவரை கமலுக்காகக் காத்திருந்தனர். ஆனால் கமல் கடைசி வரைவே இல்லை. அவர் அமெரிக்காவுக்குக் கிளம்பிவிட்டார் என்று கடைசியில்தான் சொன்னார்கள் ". இந்த உண்ணாவிரதத்துக்கு அனைவரும் வந்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம் " என்று நடிகர் சங்கம் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது . ஆனால் கமல் கடைசிவரை பெப்பே காட்டி விட்டார்.நடிகர் ரஜினி 9.30க்கு வந்து விட்டு 12 மணிக்கு போய்விட்டாராம்.எங்கே சாப்பிடத்தானே?பின் என்ன உண்ணாவிரதப் போராட்டம்? விஸ்வரூபம் பிரச்னையில்  தனக்கு ஆதரவாக நடிகர் சங்கம்  கூட்டம் போடுவதாகக்கூறி விட்டு கடைசியில் பெப்பே காட்டியதற்கு இது சரியாகப் போயிற்று என்று நினைத்து விட்டார் போல் இருக்கிறது. ஆனால் 'கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் திரை உலகில் கேளிக்கை வரியும்,சேவை வரியும்தான் அரசுக்கு...

நடிகர் திலகன் மறைவு ,

படம்
----------------------------------- பிரபல மலையாள நடிகர் திலகன். 77 வயதான இவர் 300-கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்மஸ்ரீ பட்டம் பெற்ற இவர் தமிழில் சத்ரியன், மேட்டுக்குடி, அலிபாபா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந்தேதி திலகனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு திருச்சூர் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்தது. திலகன் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். மாரடைப்புடன் திலகனுக்கு பக்கவாத நோயும் ஏற்பட்டு அவரது மூளை நரம்புகளும் பாதிக்கப்பட்டு இருந்தது. மருத்துவர்கள் அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் நடிகர் திலகன் மரணமடைந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை திருச்சூர் அருகே அரசு மரியாதையுடன் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திலகன் மலையாள நடிகர்கள் சங்கத்தினருடன் மோதலில் இருந்தார். அதனால் பிரபல மலையாள நடிகர்களான மம்முட்டி ,மோகன்லால் ஆகியோருடன் பகிரங்கமாக கருத்து ...

ரங்கசாமி இது சரியா சாமி?

படம்
மிகப் பெரிய அளவில் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகள் பெருமளவில் கிடைத்துள்ளன. மொத்தம் 14 விருதுகளை தமிழ் சினிமா தட்டிச் சென்றுள்ளது. இத்தனை விருதுகளை தமிழ் சினிமா இதுவரை பெற்றதாக நினைவில்லை. அந்த அளவுக்கு 58வது தேசிய விருதுகளை தமிழ் சினிமா வாரிச் சுருட்டியுள்ளது.  மைனா, தென் மேற்குப் பருவக் காற்று,ஆடுகளம்,எந்திரன் ஆகிய நான்கு படங்கள் விருதுகளை பெற்றுள்ளன.இதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படங்கள் எந்திரன், ஆடுகளம் ஆகியவை. மைனா படம், உதயநிதி ஸ்டாலினின் படம். அதிக அளவிலான பாராட்டுக்களைப் பெற்ற படம் தென் மேற்குப் பருவக் காற்று. அதேபோல சரண்யாவின் நடிப்பும் இதற்கு முன்பு பலமுறை பாராட்டுக்களை வாரிக் குவித்துள்ளது. அதேசமயம், இந்தப் படங்கள் அத்தனையையும் சேர்த்து ஒரே படத்தில் கொடுத்தது போல தென் மேற்குப் பருவக் காற்றில் அபாரமான நடிப்பைக் கொடுத்திருந்தார் சரண்யா.ஆடுகளம் மொத்தம் ஆறு விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது. அதேபோல எந்திரன் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற படம் தென் மேற்குப் பருவக் காற்று. இப்படத்திற்கு சி...