இந்திய வேகம் ?
உலகின் அனைத்து நாடுகளும், அதிவேக இணைய இணைப்பினைக் கொடுக்கத் தயாராகி வருகையில், இந்தியாவில் இணைய சேவை நிறுவனங்களைக் கண்காணித்து வரும், 'ட்ராய்' அமைப்பு, அண்மையில் மிக மோசமான முடிவினை எடுத்துள்ளது. விநாடிக்கு 512 கிலோ பிட் வேக இணைப்பினை “பிராட்பேண்ட் இணைப்பின் வேகமாக” அறிவித்துள்ளது. மிகச் சிறிய தென் கொரியா நாட்டில், அந்நாட்டு குடிமக்களுக்கு 29 mbps இணைய வேகமே சராசரி வேகமாக உள்ளது. இது நார்வே நாட்டில் 21.3 mbps; செக் குடியரசில் 17.8 mbps. இந்தியாவில் சராசரி இணைய வேகம் 2.5 mbps. இது இலங்கை , தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளில் உள்ள சராசரி வேகத்தைக் காட்டிலும் குறைவாகும். இது கம்பி வழி இணைய இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்துவோருக்கு பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்தியாவில், சென்ற ஜூன் மாதக் கணக்குப்படி, 1.73 கோடி பேர் கம்பிவழி இணைய இணைப்பினையும், 14.19 கோடி பேர் மொபைல் வழி இணைப்பினையும் கொண்டிருந்தனர். இந்திய இணைய பயனாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாகவும், ஒவ்வொரு சேவையும...