இடுகைகள்

கண்ணதாசன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணதாசன்----பிறந்தார்.!

படம்
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், எழுதியிருக்கிறார். திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என்று இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தார். கண்ணதாசன் 1927-ம் ஆண்டு ஜுன் மாதம் 24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் சாத்தப்ப செட்டியார். தாயார் விசாலாட்சி ஆச்சி. இந்த தம்பதிகளுக்கு மொத்தம் 9 குழந்தைகள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- 1. கண்ணம்மை, 2. ஞானாம்பாள், 3. முத்தாத்தாள், 4. காந்திமதி, 5. கண்ணப்பன், 6. ஏ.எல்.சீனிவாசன், 7. சொர்ணம்பாள், 8. முத்தையா (கண்ணதாசன்), 9. சிவகாமி. 9 குழந்தைகள் பிறந்த காரணத்தால், சாத்தப்ப செட்டியார் ஏழ்மையில் வாழ்ந்தார். முதல் இரண்டு மகள்களுக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தார். செட்டி நாட்டில், அதிக பிள்ளைகள் உடையவர்கள், குழ...