‘வரலாறு காணா விலைவாசி உயர்வு’
- எனும் வாக்கியம் எக்காலத் திற்கும் பொருந்தும் போலும்! அந்த அளவுக்கு முந்திய காலத்தைவிட அதற்கு அடுத்த காலத்தில் அது உயருகிறதே தவிர, குறைந்தபாடாய் இல்லை. இப்போதும் இதே நிலைதான். ‘உயர்ந்தவன் யார் ? கிராமவாசியா- நகரவாசியா? இல்லை, 'விலைவாசி’!' எனும் கந்தர்வனின் கவிதை நித்திய உண்மையாகிப் போனது. நல்ல பொன்னி அரிசி விலை கிலோ ரூபாய் ஐம்பதைத் தாண்டிவிட்டது.பருப்பு விலை நூறை எட்டிவிட்டது.நல்லெண்ணைய் விலை லிட்டர் இருநூற்றி ஐம்பதை நெருங்கிவிட்டது. இப்படியெல்லாம் ஆகும் என்று சில ஆண்டுகளுக்கு முன்புகூட யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.விலைவாசி உயருகிறது என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் இந்த வேகத்தில் அது எகிறும் என்று நினைத்த தில்லை. முந்திய காலங்க ளுக்கும் தற்போதைய காலத் திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான் & இந்தப் படுவேகம் தான். நுகர்வோர் விலைவாசிப் புள்ளியானது ஆண்டுக்கு 9%க்கும் மேலே உயர்ந்து வருகிறது. அதிலும் உணவுப் பொருட்களின் விலையானது கிட்டத்தட்ட 11 % உயர்ந்து வருகிறது. “ இது மிகவும் அதிகம்தான்” என்று ரிசர்வ் வங்கி கவர்னர் (7.6.13 ...