"மதம் "பிடித்தவர்கள்?
இப்போது தூத்துக்குடியில் நடக்கும் கிருத்துவ-இந்து முன்னணி சண்டை மிக நன்றாக இருக்கிறது. "மா.ஆ.தலைவர் அலுவலகம் முன் இந்து முன்னணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எங்களின் புனித நூல் பைபிள் தரையில் கொட்டப்பட்டு கோசங்கள் எழுப்பப் பட்டன.இது புனித நூலுக்கு அவமானம்.இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுங்கள்" இதுதான் தற்போதைய சண்டை நிலவரம். நமக்கு இந்து முன்னணியினரின் மத வாதம் பிடிக்காது.இந்து முன்னணி மட்டுமல்ல எந்த மதத்தினரின் தீவிரவாதமும் பிடிப்பத்தில்லை.மதமும் பிடிப்பதில்லை. காரணம் நாம் மதம்,கடவுள்,சாதி இவைகள் எல்லாம் மனிதனை பிரித்து அடிமைகளாக்கிட சில ஆதிக்கவாதிகளின் செயல் என்பது நம் கருத்து. மதம் பிடிக்காத நாம் இந்த சண்டையை வேடிக்கை பார்க்க சென்ற போது கிடைத்தது சுவாரசியமானது . ஒரு பள்ளியில் கிருத்துவ மத பரப்பிகள் சிலர் புத் தம் புதிய பைபிள்களை மாண்வர்களுக்கு துண்டறிக்கை போல் வசங்கி தங்கள் ஏசுவிடம் அடைக்கலமாக வேண்டிக் கொள்ள அது மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிய அங்கேயே வாக்குவாதம் பெற்றோர்களுக்கும்,கிருத்துவ மதவாதிகளுக்கும் நடந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற பைபிள்கள் பள...