இடுகைகள்

துரோக” லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

'டுவிட்டர்'-துரோகத்தின் கதை”?

படம்
சமூக இணையதளத்தில் தவிர்க்க முடியாத பெயர் ட்விட்டர்.140 எழுத்து அல்லது குறியீடுகளுக்குள் கருத்தைச் சொல்லும் வசதியைக் கொண்டிருக்கும் இந்தச் சமூக இணையதளம், இன்றைய தலைமுறையின் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.   ட்விட்டர் தளம் உருவான விதம் பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த செய்தியாளர் நிக் பில்டன் “கருப்பெற்ற டுவிட்டர்: பணம், அதிகாரம், நட்பு, துரோகத்தின் கதை” என்ற பெயரில் புத்தமொன்றை எழுதியுள்ளார். ட்விட்டரின் உருவாக்கத்திற்குச் சிலர் உரிமை கொண்டாடிய போதும், ஆரம்பகால நிறுவனர்களுள் ஒருவரான ஜேக் டோர்சே, சான்பிரான்ஸிஸ்கோவில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தான்தான் டுவிட்டருக்கான ஆலோசனையைத் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். ஆனால், நிக் பில்டனின் கருத்து வேறு விதமாக உள்ளது. டோர்சே டுவிட்டர் நிறுவனர் குழுக்களில் முக்கிய உறுப்பினர் என்ற போதும், இது கூட்டுமுயற்சிதான் எனத் தெரிவித்துள்ளார். டோர்சே பின்னாளில் நிறுவனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். டோர்சே இதுகுறித்து சிபிஎஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், நானும் நண்பர்களும் அடுத்து என்ன செ...