சிங்கள-இந்தி " கஃபே"
இந்தியாவில் எடுக்கப்பட்ட மெட்ராஸ் கபே என்ற திரைப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய தமிழக உணர்வாளர்களும் தமிழ் அமைப்புகளும், அப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் தங்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும் என வலியுறுத்தியதுடன், இது தொடர்பாக தமிழக காவல்துறை ஆணையாளரிடம் மனு ஒன்றையும் கொடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதில் அளித்த படத்தை இயக்கி, நடித்த ஜோன் ஆபிரகாம், தமிழ் அமைப்புகள் விரும்பினால் நாங்கள் படத்தை முன்கூட்டியே காட்டுவோம் என்று தெரிவித்தார். திரைப்படக் குழு, ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், திராவிட விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு மற்றும் சில தமிழ் அமைப்புகள் மற்றும் இயக்குநர் கௌதமன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சீமான் ஆகியோர் உட்பட பலரும் இப்படத்தை பார்த்தனர். படத்தைப் பார்த்த இவர்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். படத்தை பார்த்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்டபோது, மிகவும் கோபத்துடன் ‘மெட்...