"கூடா நட்பு "
கொழும்புத் துறைமுகத்தில், கப்பல்களை கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் பணியில் "கொழும்பு டாக் யார்ட் "நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களே இதுவரை பணியாற்றி வருகின்றனர். கிட்டத்தட்ட 2000பேர்கள் . இவர்களை அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றிவிட்டு இலங்கையர்களை வைத்து பணியைத் தொடர பக்சே அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இதற்காக இலங்கையர்களுக்கு கப்பல் தொழில் பயிற்சி சீன அரசு மூலம் கொடுக்கப்படுகிறது. இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் தமிழ்நாட்டில் இருந்து வரும் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம் என்று கொழும்புத் துறைமுக சுமை இறக்கும்தொழிலாளர் சங்கத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்போது இந்திய தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இங்குள்ள காங்கிரசு சோனியா அரசு இலங்கை நட்பு நாடு,அண்மை நாடு என்று பக்சே ஆதரவுடன் செயல்படுகிறது.ஆனால் இலங்கை நிலவரமோ இந்திய எதிர்ப்பு நிலையில் உள்ளது.பாகிஸ்தான்,சீனா,ரஷ்யா என்று பக்சே கை...