வீட்டுக்கு, வீடு
மின் தயாரிப்பு,,,, * ஒவ்வொரு வீட்டிலும் சூரியசக்தி மின்சாரம் * பயன்படுத்தியதுபோக விற்பனை செய்யலாம் * ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தப்பும் * அரசுக்கு பல ஆயிரம் கோடி செலவும் மிச்சம். அதானி தான் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க முடியுமா? வீட்டுக்கு வீடு மக்களே சோலார் தகடுகளை பயன்படுத்தி தாங்களும் மின்சாரம் பயன்படுத்தி, மீதமுள்ளதை அரசுக்கே திருப்பி தர முடியாதா? ஹெய்தி போன்ற குட்டி ஆப்ரிக்க நாடுகளால், அதன் மக்களால் சாதிக்க முடிந்தது, இந்தியா போன்ற வல்லரசு நாடு ஆசையில் உள்ள ஒரு நாட்டு மக்களால் முடியாதா? முடியும்...முடியும்...ஆனால்... அரசுக்கு தான் மனது வேண்டும்; மக்களால் முடியும் என்று முனைப்பு காட்டி, வீட்டுக்கு வீடு சோலார் தகடுகளை பொருத்திக்கொள்ள, மானியமும் வாங்கித்தந்து, அதானியை விட அதிகமாக மின்சாரத்தை தயாரித்து தர முடியும். அப்படி தந்தால், அதானிக்காக ஒதுக்கி தர, விவசாயிகளிடம் இருந்து பறிக்க வேண்டிய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் மிச்சம் தானே; பல ஆண்டுகளாக அதானிக்கு தர வேண்டிய பல ஆய...