டி.எம்.செளந்தரராஜன்,
டி.எம்.எஸ். என்று அனைவராலும் அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (மே 25) காலமானார். சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் கால் தவறி விழுந்ததில், டி.எம்.எஸ்-க்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பினார். சில நாள்களுக்கு முன்பு மீண்டும் டி.எம்.செளந்தரராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற அவர், 19-ஆம் தேதி வீடு திரும்பினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சில நாள்களில் அவரது பேரனுக்கு திருமணம் நடைபெற்றது. 22-ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் டி.எம்.எஸ். கலந்து கொண்டார். சென்னை மந்தைவெளியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த அவருக்கு, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் சில நாள்களாக டாக்டர்கள் அவரது வீட்டிற்கே வந்து சிகிச்சையளித்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் டி.எம்.எஸ்-க்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பிற்பகல் 3.50 மணிக்கு அவரது உயிர...