விளக்க வேண்டும்!
அறிவுக்கு பொருந்தாத, வெறுப்பையும், சாதிய வெறியினையும் தூண்டி விடும் வன்மம் வடியும் விஷமத்தனக் கருத்துக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். இதற்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என அக்கட்சியில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- சகஜானந்த அடிகளாரின் 135வது பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வரலாற்று அறிவு சூனியத்தை வெளிப்படுத்தியுள்ளார். கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு புத்தாயிரம் தொடங்கிய போது, அறிஞர்களின் தலைசிறந்த பேரறிவாளர் காரல் மார்க்ஸ் என்பதை உலகம் ஒப்புக்கொண்ட வரலாற்று உண்மையை அறியாதவர் ஆளுநர் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். சமூக இயக்கத்தின் தோற்றம் தொடங்கி, பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தை பகுத்தாய்ந்து, சமூக இயக்கவியல் விதிகளின் அறிவியல் அடிப்படைகளை நிறுவி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் காரல் மார்க்ஸ். சமூக புல்லுருவியாக உருவான புரோகிதக் கும்பல், ஆதிக்க சக்திகளை வசப்படுத்தி, தங்களை நிலைநிறுத்திக் கொள்ள, மனுவின் வர்ணாசிரம கருத்தியலில்...