எய்ட்ஸ் வியாபாரம்!

'ஃபயர் இன் த பிளட்' டைலன் மோகன் கிரேயின் ஆவணப்படம், ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் மருந்தை லாப நோக்கத்துக்காக மட்டுமே விற்பனை செய்த மேற்கத்திய மருந்து நிறுவனங்களின் தீய நோக்கத்தைத் துகிலுரித்தது. இந்த ஆவணப்படத்தைப் பார்த்தவர்களால் மருந்து நிறுவனங்கள் மேல் ஆத்திரப்படாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மருந்து நிறுவனங்கள் மனித உயிரைப் பொருட்டாக நினைக்காமல், வெறும் லாப நோக்கத்தை அதுவும், அதீத லாபத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதை இப்படம் விவரிக்கிறது. இந்த ஆவணப்படம் தற்போது, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா உள்பட உலகின் முக்கிய நாடாளுமன்றங்களில் திரையிடப்படவுள்ளது. லாபமே பிரதானம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பாதித்தவர்கள் அதிகம். மேற்கத்திய மருந்து நிறுவனங்கள் எய்ட்ஸுக்கான மருந்துகளை விநியோகித்துக் கொண்டிருந்தன. ஆனால், அந்நிறுவனங்களின் கருதுகோள் “நீ ஏழையா, எச்ஐவி பாதிப்பு இருக்கிறதா, அப்படியானால் நீ சாவதைத் தவிர வேறு வழியில்லை” என்பதாக இருந்தது. மலிவான விலையில் எச்ஐவிக்கான மருந்தை விற்பனை செய்ய முடியும் என்றபோதும் மேற்கத்திய மருந்து நிறுவனங்கள் அதைச் செய்யவி...