இடுகைகள்

ராம(வதை) ராஜ்யம்!

படம்
 “மடிக்கணினி திட்டத்தை தடுக்க நினைக்கும் பழனிசாமியின் கனவு பலிக்காது” - உதயநிதி ஸ்டாலின். கேரளாவுக்கு கனிம கடத்தல்: அதிமுக கவுன்சிலர் கைது: உடந்தையாக இருந்த 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம். விபி ஜி ராம் ஜி திட்டம் | ‘‘125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே!’’ - மு.க. ஸ்டாலின் விமர்சனம். கஞ்சா புகைப்பதை தட்டி கேட்டதால் போரூரில் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது: சிறுவன் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை. மாணவர் அமைப்புத் தலைவர் ஒஸ்மான் சுட்டுக் கொலை.வங்கதேச தலைநகர் டாக்காவில் வன்முறை. டிச.22ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை. தேர்தல்கள் சமயத்தில் கட்சிகள் இடையே செய்கிற ஒப்பந்தம் தான் கூட்டணி:  எடப்பாடி விளக்கம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதா சட்டமான பிறகு மாநிலங்களுக்கு ரூ.29,000 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.  பா.ஜ.கவின் வதை ராஜ்யமும்! “காந்தி விரும்பியது ராம ராஜ்யம்தான். அவருக்கு விருப்பமான ராமர் பெயரைத் தானே வைத்திருக்கிறோம்” என்று ஒன்றிய அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தி...

ஏன் இந்(திய)த வெறி?

படம்
  இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் டாக்காவில் உள்ள இந்திய உயர் தூதரகத்தை நோக்கி பேரணியாகச் சென்று தாக்குதல் நடத்துவது குறித்தான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது. ஏன் இந்த வெறி.இந்தியர்கள் சிந்திய ரத்தத்தால்தான் வங்கதேசம் என்ற நாடே உருவானது பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் (Bangladesh) விடுதலை பெற இந்தியா மிக முக்கியமான ராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியது.டிசம்பர் 6, 1971 அன்று வங்கதேசத்தை ஒரு தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  1972-ல் 25 ஆண்டுகால நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தானது.  1975-ல் ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலைக்குப் பிறகு வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக எல்லைப் பிரச்சனைகள், நதிநீர் பங்கீடு மற்றும் பயங்கரவாதம் போன்ற விவகாரங்களால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. 1996-ல் ஷேக் ஹசீனா பிரதமரான பிறகு, 30 ஆண்டுகால கங்கை நீர் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உறவு மீண்டும் சீரடையத் தொடங்கியது.  2024 ஆகஸ்டில் வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இரு நாட்டு உறவு...

இழப்பதற்கு ஒன்றுமில்லை!

படம்
  ' திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜன் உத்தரவு பிறப்பிக்கவில்லை.1996-ல் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றவேண்டும் என நீதிமன்ற உத்தரவில் இல்லை' என உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மனு விசாரணைக்கு ஏற்றதா என்பது குறித்து மட்டும் வாதிட வேண்டும் மனுதாரருக்குநீதிபதிகள்அறிவுறுத்தியுள்ளனர். கோவை பெண்ணுக்கு ஆபாசப்பெயருடன் கேஷ் ஆன் டெலிவரியில் வந்த 'ஆயிரக்கணக்கான' பார்சல் . இனி உங்கள் பிஎஃப் நிதியில் 75% வரை யுபிஐ , ATM மூலம் எடுக்கலாம்.. EPFO புதிய விதிகளை வெளியிட்ட ஒன்றிய அமைச்சர். ஜெயலலிதா வரி செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை எவ்வளவு? வரு​மான வரித்​துறை விளக்​க ஐகோர்ட் உத்தரவு. உலக அளவில் ஊக்கமருந்து பரிசோதனையில் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக அளவில் தோல்வி. திமுக இளைஞரணி மாநாட்டின் அடுத்த மண்டல மாநாடு ஜனவரி 24-ம் தேதி விருதுநகரில் நடைபெறும் என தகவல். இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்கா அதிக வரி.குறைக்க பேச்சு நடத்தபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை நீடிப்பு. மழைத் ...

'அநியாயம் இந்த ஆட்சியிலே

படம்
  இது அநியாயம்!" பீகாரில் வங்கி கணக்கில் தவறுதலாக வந்த பணத்தை திருப்பித் தரக் கோரிய அதிகாரிகளிடம், நாங்கள் அளித்த வாக்கை திருப்பிக் கொடுங்கள் என்று கிராம மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.  பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, வாக்குகளைக் கவரும் வகையில் ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்’ என்ற பெயரில் பெண் தொழில்முனைவோருக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டத்தை நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசு செயல்படுத்தியது.  இத்திட்டத்தின் கீழ் சுமார் 1.40 கோடிப் பெண்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டது. ஆனால்,  இத்திட்டத்திற்குத் தகுதியற்ற பல ஆண்களின் வங்கிக் கணக்கிலும் இந்தத் தொகை தவறுதலாக வரவு வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், வங்கிக் கணக்கு ஆய்வின் போது இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, தவறுதலாக அனுப்பப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளனர்.  இந்நிலையில் தர்பங்கா மாவட்டம் ஜலே தொகுதியில் உள்ள அகியாரி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் ...