"புதிய தலைமுறை"யின் பழமையான முகம்,
பச்சமுத்து 18-ம் தேதி சென்னை, திருச்சி, டெல்லி, காசியாபாத், சோனேபேட் (அரியானா), பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள எஸ்ஆர்எம் குழும அலுவலகங்கள், கல்லூரிகள், ஊடக, திரைப்பட நிறுவனங்கள் மற்றும் பச்சமுத்து குடும்பத்தினரின் வீடுகளில் 250 வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்ற சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைகளின்போது, ரூ.6.45 கோடி ரொக்க பணமும் நன்கொடை வாங்கிய ஆவணங்கள், செலவு அதிகரித்து காட்டப்பட்ட பதிவுகள், அறக்கட்டளை பணத்தை வேறு இனங்களுக்கு திருப்பிவிடப்பட்ட ஆவணங்கள் சிக்கின. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எஸ்ஆர்எம் பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து, ரூ 6.45 கோடி பணம் வேந்தர் மூவீஸ் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டது. 'அந்த நிறுவனம் அவரது கட்சிக்காரர்களால் அவர் பெயரில் நடத்தப்படுவது, அவருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை 'என்று தெரிவித்திருக்கிறார். தன் மகளுக்கு எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்குவதற்கு ரூ 30 லட்சம் நன்கொடை கொடுத்ததாக ஒரு தந்தை கொடுத்த புகார் மீது மத்திய புலன...