" எனது அரசின்" ஐந்தாண்டு சாதனைகள்?
இதுதாங்க ஐந்து ஆண்டு கால ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் சாதனை என்று ஒரு லிஸ்ட் வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து அதிமுகவினர் பெரும் பீதி அடைந்துள்ளனர். காரணம், அப்படியாப்பட்ட டென்ஷன் லிஸ்ட் அது! சிலர் வாட்ஸ் அப்பில் அதிமுகவின் சாதனை (வேதனை)களை பட்டியலிட்டுள்ளனர். அந்த பட்டியலை நீங்களும் படியுங்கள். *.வெற்றி பெற்ற முதல் நாள் உங்கள் அரசு என்ற வார்த்தை மறுநாள் நான், எனது அரசு என்றானதே .. *.சமச்சீர்கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது. *.பாட புத்தகங்களை அச்சடித்து 450 கோடியை வீணடித்தது. *.அண்ணா நூலகத்தை நாசபடுத்தியது . *.பஸ் கட்டணம் உயர்தியது. *.பால் விலையை உயர்த்தியது. *.மின்சார கட்டணத்தை உயர்த்தியது. *.கடுமையான மின் தட்டுபாடை ஏற்படுத்தியது. *.ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காது. *.தொழில் வளர்ச்சியை முடக்கியது . *.தொழில் நிறுவணங்கள் தமிழகத்தை விட்டே ஒடியது. *.சட்டசபையை " பெஞ்ச் தட்டும் சபையாக " மாற்றியது. *.கரும்பு விவசாயிகளை கதற விட்டது . *.நெல் விவசாயிகளை நெம்பியெடுத்தது. *.கிராம, தாலுகா அலுவலங்களில்...