இடுகைகள்

பொது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

`தை பிறந்தால் வழி பிறக்கும்‘

படம்
  `தை பிறந்தால் வழி பிறக்கும்‘  என்பது தமிழகத்தின் நெடு நாளைய பழமொழி.  சூரியன் சுற்றும் நிலையின் கணக்கினைக் கொண்டு, அந்நாளில் தை முதல் ஆனி ஈறாக ஒரு பகுதியும், ஆடி முதல் மார்கழி ஈறாக மற்றொருபகுதியும் விளங்கின. ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலம் இருள் நிலை கொண்டது. தை முதல் ஆனி ஈறாகக்கொண்ட காலம் பகல்நிலை கொண்டது. ஆண்டின் இரவுக் காலமாகிய ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலத்தில் -அதாவது ஆடிக் காற்றிலும்,  அடுத்துள்ள ஐப்பசி மழையிலும், மார்கழிப் பனியிலும் குளிரிலும் இடர்ப்படும் பொழுது மக்கள் உள்ளத்தில்  `தை பிறந்தால் வழி பிறக்கும்‘ என்ற நம்பிக்கை ஒலி பேரொலியாய்க் கேட்கிறது. இந்த இரவு நிலை மாறிப் பகல்நிலை பெற்றுப் பயன்தரும் தைப்பிறப்பு நாளைப் புத்தாண்டின் புனித நாளாய்,பிறப்பு நாளாய்ப் பழந்தமிழர் கொண்டாடி வந்தனர். இன்றுங்கூட, தைப் பிறப்பபைத் தனிப் பெருஞ் சிறப்பாகத் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  ஆகவே,  நாம் தைத் திங்களையே தமிழர் ஆண்டின் முதல் திங்களாய்க் கணக்கெடுத்துச் செயற்படுத்துவோம்.... இடையில் ,{இப்போதும்...

விடுதலைப்புலிகள்

படம்
விடுதலைப்புலிகள் அமைப்பின் நிதி திரட்டும் கட்டமைப்பு 2012 ஆம் ஆண்டில் தொடர்ந்தும் செயற்பட்டு வந்திருக்கிறது என்று அமெரிக்க அரசுத்துறையின் 2012 ஆம் ஆண்டுக்கான  அறிக்கை கூறியுள்ளது. அதேவேளை, இலங்கையில் உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பு எந்தவிதமான தாக்குதல்களையும் நடத்தவில்லை.  அகதி முகாம்களில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களைக் கொண்டு செல்வதில் அந்த அமைப்பு தொடர்ந்தும் ஈடுபடுவதாக அமெரிக்க அறிக்கை கூறியுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளிநாட்டு நிதிக் கட்டமைப்பு தொடர்ந்தும் நிலைபெற்று இருப்பதாவுகம் அதனை உடைப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினாலும், ஏனைய சில வெளிநாட்டு உளவு நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முழுமையாக வெற்றிபெறவில்லை . சர்வதேச ரீதியிலான ஆட்கடத்தல் விவகாரத்தைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கட்டமைப்பு ரீதியாக அதில் தொடர்பு இருப்பதாக  தகவல் கிடையாது . அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் அல்லது ...

இதுவும் வாழ்த்துதாங்க

படம்
ஆண்டின் கடைசியில் இருக்கிறோம் . ஒவ்வொரு ஆண்டும் மிக நல்லதாக நாட்டுக்கும்,தனிப்பட்ட முறையிலும் அமைய எண்ணுகிறோம்-விரும்புகிறொம்.ஆனால் அப்படி அமைவது போல் தெரியவில்லை.நாட்டை ஆள்வோர் எடுக்கும் ஒ வ்வொரு முடிவும் நாட்டை மட்டுமல்ல நமது தனிப்பட்ட வாழ்வையும் செல்லும் திசையை முடிவு செய்கிறது. அதுவும் உலகமயமாக்கல் வந்து சேர்ந்த பின் வெளிநாட்டினர் எடுக்கும் முடிவு கூட நமது பாதையை தீர்மானிக்க ஆரம்பித்து விட்டது. இயற்கை மட்டுமே அனைத்தையும் திசை மாற்றும் மாபெரும் சக்தி என்பதை நாம் ஆழிப்பேரலை -நிலநடுக்கம்-எல்நினோ போன்றவைகளின் தாக்கங்களுக்குப்பின் உணர்ந்திருக்கிறோம். இயற்கை,-ஆட்சியாளர்கள்-,அவர்களை வழிநடத்தும் அமெரிக்கா -இவர்கள் மூவரும்தான் இன்றைய இந்திய மக்களின் தலைவிதியை முடிவு செய்யும் மும்மூர்த்திகள் இவர்கள் கரூணை இந்த 2013 புத்தாண்டில் கிடைக்க வேண்டும் . உங்களுக்கு கிடைக்கும் .  வரும் 2013 ஆங்கிலப்புத்தாண்டு உங்களுக்கு நல்லதாக அமைய வாழ்த்துக்கள்! ------------------------------------------------------------------------------------------------------------------------...

போட்டியாளர்கள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

படம்
  கூகுளை மிஞ்சிய பேஸ்புக் சொத்து மதிப்பில் கூகுள் இணையதளத்தின் நிறுவனர்களான செர்ஜி பிரின், லேரி பேஜ் ஆகியோரை சூகர்பெர்க் முந்தினார். சூகர்பெர்க் நிறுவிய சமூக இணையதளமான பேஸ்புக் தற்போது உலக அளவில் அதிக வாடிக்கையாளருடன் பிரபலமாக திகழ்கிறது. இந்நிலையில்  ரூ,1317 முக மதிப்பு கொண்ட பேஸ்புக்கின் 2.25 லட்சம் பங்குகளை ஜிஎஸ்வி நிதி நிறுவனம் வாங்கியுள்ளது. ஜிஎஸ்வி முதலீடு மூலம் ரூ.60,750 கோடியாக இருந்து சூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு, ரூ.81,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் சொத்து மதிப்பில் கூகுள்  செர்ஜி பிரின் ,லாரி பேஜ் ஆகியோரை விடசூகர்பெர்க் முன்னிலையில் உள்ளார். உலகின் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த பெரும் பணக்காரர்கள் பட்டியலிலிலும்3ம் இடத்தை  சூகர்பெர்க் பிடித்துள்ளது குறிப்பிடதக்கது. இந்த பட்டியலில் ரூ.2.52 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் ஒராக்ல்ஸ் லேரி எலிசன் ரூ.1.78 லட்சம் கோடியுடனும் முன்னிலை வகிக்கின்றனர். போட்டி அத்துடன் முடியவில்லை.பேஸ்புக்கிற்கு கூகுள் பதிலடி தரவுள்ளது. உலகின் பிரபல சமூக இணைப...

சாய்பாபா -எண்ணெய் வடியும் சிலை?

படம்
சத்ய சாய்பாபாவின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக கூறப்படுகி்றது. இதனால் புட்டபர்த்தியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து அந்த நகரில் போலீசார் தடையுத்தரவு பிறப்பித்துள்ளனர். கடந்த மாதம் 28ம் தேதி சாய்பாபா நெஞ்சு மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். இதையடுத்து அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிக்ச்சை அளித்து வருகி்ன்றனர். அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல் நிலை மேலும் மோசமாக உள்ளது. கடந்த வாரம் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றனர், தற்போது மேலும் மோசமாக உள்ளது என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சாய்பாபாவின் கல்லீரல் செயல் இழந்தது. இதனால் அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளது. இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சாய்பாபா ஜீவ சமாதி அடைய விரும்புவதாக வதந்திகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....

உலகம் பலவிதம்

படம்
பிரான்சில் பெண்கள் பர்தா அணிந்தால் நடவடிக்கை முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிய பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமலுக்கு வந்தது. ஐரோப்பிய நாடான பிரான்சில் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடைவிதித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து முன்பு அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் சார்கோஸி கூறியதாவது, இது இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கையல்ல. பர்தா என்பது மத அடையாளமன்று, மாறாக பெண் அடிமைத்தனத்தின் அடையாளம். அதை பிரெஞ்சு குடியரசில் ஒரு நாளும் அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் பர்தாவுக்கு ஆதரவு தெரிவித்த கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி ஜாக்கியுஸ் மியார்ட் கூறுகையில், பர்தா என்பது பிரெஞ்சு கலாச்சாரத்திற்கு அதிர்ச்சியளிக்கும் ஒன்று. முகம் என்பது கண்ணியமானதாகும். அது உங்களின் பாஸ்போர்ட் என்றார். இன்று முதல் பெண்கள் பர்தாவுடன் பிடிபட்டால் முதல் எச்சரிக்கப்படுவர், பின்னர் ரூ. 9 ஆயிரத்து 52...

விஜயகாந்துக்கு குடி பழக்கம் கிடையாது,,,,,,

படம்
  நடிகர் மன்சூரலிகான் சான்றிதழ்? நடிகர் விஜயகாந்துக்கு குடிப்பழக்கமே கிடையாது. அவர் ஜனாதிபதி கையில் சிறந்த குடிமகன் விருது பெற்றவர் என ‘சீரியஸாக’ கூறியுள்ளார் நடிகரும் ‘மிகச் சிறந்த குடிமகனு’மான மன்சூரலிகான்! நடிகர் மன்சூர்அலிகான்.அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இருந்து,,,,,,,,,, ”நடிகர் வடிவேலு அரசியல் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் நடிகர் விஜயகாந்தை தரக்குறைவாக பேசி வருகிறார். விஜயகாந்தின் குரல் எப்போதும் மெதுவாகத்தான் இருக்கும். அவர் மாதம் முழுவதும் வெளியில் அலைந்து மைக்கை பிடித்து பேசுவதால் அது போதையில் பேசுவது போல்தான் தெரியும். என்னுடைய குரலும் அப்படித்தான் இருக்கும். வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரால் ஏற்பட்ட பிரச்சினையை பேசி தீர்க்காமல் கோர்ட்டு வரை சென்று இப்போது அதனை வைத்து நடிகர் வடிவேல் அரசியல் மூலம் பழி வாங்குகிறார். வடிவேலுவிடம் 2 வருடத்திற்கு முன்பு இதுபற்றி பேசி இருக்கிறேன். நடிகர்கள் ஒரு தெருவில் வாழ்பவர்கள். அவர்கள் மற்றவர்களுக்கு பலியாகிவிடக் கூடாது. தேர்தல் இன்னும் 4 நாட்களில் முடிந்து வி...

இளமை இதோ -இதோ,

படம்
என்றும் இளமையாக இருக்க,,,,,,,,,, அனைவரும் விரும்புவது எந்த வித நோய்களும் இல்லாமல் ஆரோக்கியமாகவும், என்றும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்பதே.அதற்கு கடைபிடிக்க வேண்டியவைகள் மூன்று:   உணவு உணவு என்றாலே நமக்குத் தெரிந்தது சாதம் தான். இது தவறு. நமது உணவை மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். சாதம் போன்றவை ஒரு பாகம் இருந்தால் மற்றொரு பாகம் காய்கறிகள் இருக்க வேண்டும். இன்னொரு பாகம் புரதச்சத்து தரும் சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், தயிர் போன்றவை இருக்க வேண்டும். நாம் இளமையாக இருக்க இது போன்ற உணவுப் பழக்கம் ரொம்ப முக்கியம். வெறும் அரிசி சாதம், சப்பாத்தி போன்றவைகளைச் சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட்டுகள் தான் உடலில் சேர்கிறது. மற்ற விஷயங்கள் சேருவதில்லை. காய்கறிகளிலும், பழங்களிலும் வயோதிகத்தைக் குறைக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள் நிறைய இருக்கின்றன. அவை நம் உடலை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதே போல் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. கொஞ்சமாய்ச் சாப்பிட்டாலே போதும்.   உடற்பயிற்சி நம் உடல் அழகாக இருக்க வேண்டும் என்று ஆர்வப்படும் அளவுக்கு அதற்காக நாம் சிரத்தை எடுத்துக்...

இரண்டாம் முறையாக.........

படம்
வெற்றிக் களிப்பில் சச்சின் டெண்டுல்கர் பத்தாவது கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி தனதாக்கிக் கொண்டுள்ளது. 275 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இலங்கை அணியை எதிர்கொண்ட இந்திய அணி நான்கு விக்கட்டுக்கள் இழப்புக்கு 48.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது. 1983 ஆம் ஆண்டின் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி உலகக் கோப்பையை வென்று தனது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.  மஹேல நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்கள் இழப்புக்கு 274 ஓட்டங்களைக் குவித்தது. 88 பந்துகளில் 13 பவுண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்களைக் குவித்த மஹேல ஜயவர்தனவின் அதிர...

பிரபாகரன் எங்கே,,,,,,?.

படம்
இ லங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை ! விக்கிலீக்ஸ்   தகவல்! விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அந்தத்தகவல் மிக பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. அதே சமயம் அத்தகவல் உண்மையாகவேண்டும் என்றத் தவிப்பையும் உருவாக்கி விட்டுள்ளது. கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள். அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் போர் களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய...

அண்ணாவின் ஆவி

படம்
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தின் போது  "நான் முன்னரே தெரிவித்தது போல மக்களுடனும், தெய்வத்துடனும் தான் கூட்டணி வைத்திருக்கிறேன். சிறு வயதில் இருந்தே எனக்கு எம்.ஜி.ஆர் மீது அதிக பற்று உண்டு. அவர் எந்தெந்த படத்தில் என்னென்ன உடையில் வந்தார் என்று கூட என்னால் சொல்ல முடியும். விஜயகாந்த் ஏன் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று நீங்கள் நினைக்கலாம்.பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றால் தான் அவர் பெயர் கொண்ட அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துள்ளேன். அண்ணாவின் ஆவி கூறியதின்பேரிலேயே அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறேன். விஜயகாந்த் பணம் வாங்கிக் கொண்டு தான் அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று தி.மு.க.,வினர் கூறுகின்றனர். இது உளவுத் துறையின் தவறான தகவல் ஆகும். நான் பணத்தை மதிப்பவன் அல்ல. கோடிக்கு மயங்கியிருந்தால் நான் மக்களைத் தேடி வந்திருப்பேனா? கடைக்குப் பொருள் வாங்கச் சென்றால் பார்த்து வாங்குவது போல, தேர்தலில் நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள். நாளைக்கு நல்லது நடக்கும், நடக்காவிட்டால் யாரையும் விடமாட்டேன். என் குணத்தை மாற்ற யாராலும் ம...

இலவசத்தால் வீணாகும் தமிழகம்’’’’’’’’’2’’

படம்
அதிமுக [  தேர்தல்] இலவசங்கள் அறிக்கை தி.மு.க., வுக்கு சற்றும் சளைக்காமல் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஏராளமான சலுகைகள் இடம்பெற்றுள்ளன. குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றார். பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும்.  அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசமாக வழங்கப்படும் என்றார். 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஆகியன தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். அனைவருக்கும் இலவச கே பிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும். அது இல்லாவிட்டால் இது என்பது போல் இல்லாமல், இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன இலவசமாக வழங்கப்படும் . நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும். ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும். மக...

நண்பர்களே கவனியுங்கள்

படம்
தமிழகம் சென்று வந்த டென்மார்க் தமிழரின் மனக்குழுறல் ! March 20, 2011 தமிழகமும் அதன் கோலமும் பரடைசியா ம. ரமேசுவின் மடல் (தமிழகம் சென்று திரும்பிய எனது மனவோட்டம்) படித்தவர்கள்முதல் பாமராகள்வரை து}ய்மை துப்புரவுபற்றி யாரும் பொருட்படுத்துபவர்களாக காணோம் தமது தேவை முடிந்தால் போதுமென்று போய்க்கொண்டே இருக்கின்றனர். வீதிகளில் வண்டிகளை தமது விருப்பப்படி ஓட்டுகின்றனர் சுதந்திர இந்தியர்களாக வீதிக்கட்டுப்பாடுகளை விதிமுறைகளைப்பற்றி எண்ணிப்பார்ப்பதே கிடையாது போலும். சென்னையின் வீதிகளில் வாகனம் செலுத்துவதென்பது மகா வேலை அதற்கு விமானமே ஓட்டிவிடலாம். மலசல கூடங்கள் மிகுந்த அசுத்தமாகவே இருத்தல் வேண்டும் என்பது தமிழர்கள் விருப்போ என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது இது பற்றி தெளிவு ஏற்படுத்த கமலும் ரசனியும் விசையும் வருவார்களா திரையில்? பராமரிப்பாளர்களை கவனிப்பதற்கும் ஆள் தேவைப்படுகின்றது சமயங்களில் பரா மறைவு. மொத்தத்தில்; எங்கும் ஒழுங்கு கடைப்பிடிப்பவர்களாக தமிழர்கள் இல்லை பாடசாலையிலிருந்து கற்றுவந்திருக்கவேண்டிய விடயம் முந்தி வினாயகர்களாக ஒழுங்கின்றி மொய்க்கும் தமிழர்...

தன் மானச்[அ] சிங்கம்

படம்
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், அக்கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிட போவதில்லை என்றும் கூறியுள்ளது. தங்கள் கட்சி தன்மானத்தையும், சுயமரியாதையையும் இருகண்களாகப் போற்றுவதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது. தொகுதி பங்கீட்டில் தாங்கள் நடத்தப்பட்ட விதமும், தங்களிடம் கடைப்பிடிக்கப்பட்ட போக்கும் தொண்டர்களை மிகவும் காயப்படுத்தி விட்டதாகவும், அதிமுக பொது செயலரின் நடவடிக்கைகளும், அணுகுமுறைகளும் முன்பு இருந்தது போலவே இருக்கிறது என்றும், காலம் தந்த படிப்பினைகளால் அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் மதிமுக குறிப்பிட்டுள்ளது. ’கண்களை விற்றுச் சித்திரம...

பிரபாகரனை காக்க முயன்ற மேலை நாடுகள்,,,

படம்
பிரபாகரனை இலங்கை ராணுவம் நெருங்காமல் தடுக்க முயன்றன மேற்கத்திய நாடுகள் ! விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்  பிரபாகரனை, இலங்கை ராணுவம் நெருங்கி விடாமல் தடுத்து அவரை காக்க மேற்கத்திய நாடுகள் கடுமையாக முயன்றன என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. பிரபாகரன் மறைந்திருந்த பகுதியில் ராணுவம் கடும் குண்டுவீச்சை மேற்கொண்டபோது, இருதரப்புக்கும் இடையேயான மோதலை தவிர்க்கும் வகையில் சில மேற்கத்திய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டதாக அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி பீட்டர் பர்லர், வாஷிங்டனுக்கு குறிப்பு அனுப்பினார். இருப்பினும் இதை சீனா மட்டும் விரும்பவில்லை என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் நடத்திய போரை பாராட்டும் வகையில் அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கருத்து தெரிவித்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க அதிகாரிகளிடம் மேனன் பேசுகையில், புலிகள் மீது இலங்கை ராணுவம் தான் எதிர்பார்த்ததை விட கடும் போர் மேற்கொள்வதாகவும்,விரைவில் புலிகள் அழிக்கப்படுவார்கள் என்றும் மகிழ்ச்சி பொங்கக் ...

வெப்ப காலம்,,

படம்
இப்போது தேர்தல் சூடு பறக்க ஆரம்பித்து விட்டது. இது அதை பற்றியது அல்ல. தமிழகத்தில் வெயில் காலம் ஆரம்பம்.கோடையில் சுற்றுப்புறவெப்பம் மட்டுமின்றி, நமது உடல் வெப்பமும்அதிகரிக்கிறது. இதனால், பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சிறுநீர் கழித்தலில் தொல்லை, வியர்வை கோளங்களில் அடைப்பு, தோல் நோய்கள், தோலில் கிருமிகள் வளர்ச்சி,நாவறட்சி, அதிக தாகம், கண்மற்றும் உடல் எரிச்சல், மலச்சிக்கல், நீர்ச்சத்து குறைவால் திடீர் மயக்கம், வெப்பத்தாக்குதல், மூர்ச்சையாதல் தொந்தரவுகளை நீக்கிட சில எளிய வழிகல். உடல் வெப்பம் அதிகரிப்பால் மலச்சிக்கல், கபால அறை மற்றும் உள்ளுறுப்புகளில் வறட்சி ஏற்பட்டு நீர்கோர்த்தல், தூக்கமின்மை, சுவையின்மை, தோல் மற்றும் அவயங்களில் ஒருவித கசகசப்பு ஏற்படும். உடல் பருமனாக இருப்பது போன்ற உணர்வு, தோல் நிற மாற்றம், பல் கூச்சம், கொட்டாவி, மயக்கம், குடைச்சல் ஏற்பட்டு கிறுகிறுப்பு, அதிவியர்வை வெப்பத்தால் தோன்றும் துன்பங்கள் என அகத்தியர், யூகி முனிவர் குறிப்பிடுகின்றனர். இதை தணிக்க உணவில் காரம், புளிப்பு, உப்பை குறைக்கவேண்டும். அனல் அருகில்இருத்தல், வெயிலில் அலைச்லை தவிர்க்க வேண்டும். நன்க...