இடுகைகள்

வேதகாலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேதகாலம் பொற்காலம் ?

படம்
வேதகாலம் பொற்காலம் என்றும் வேதகாலத்துக்குத் திரும்புவோம் என்றும்பழமைவாதிகளும் இந்து மதவெறியர் களும் இன்று முழக்கமிட்டுக் கொண்டிருக் கிறார்கள்.  உண்மையிலே வேதகாலம் பொற்காலமாக இருந்ததா?  இப்போது வேதகாலத்துக்கு திரும்பினால் எப்படிஇருக்கும்?  வேதகாலம் எனப்படுவது என்ன?  வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?  அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சமுதாயம் எப்படிப் பட்டது?  அந்த சமூகவிழுமியங்களை இன்றுநடைமுறைப்படுத்த முடியுமா? இப்படிஏராளமான கேள்விகள் நம் முன்னே வரிசை கட்டுகின்றன.  வேதங்களின் பெயர்களைக் கூட உச்சரிக்கக்கூடாது; அப்படி உச்சரித்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தரவேண்டும் என்று மனுதர்ம சாஸ்திரத்தில் எழுதப்பட்டு அதைநடைமுறைப்படுத்தவும் செய்திருக்கிறார் கள்.  அதன்படி வேதங்களிலிருந்து விலக்கப்பட்ட பெரும்பான்மையான உழைப்பாளி மக்களான சூத்திரர்கள் இன்றுசநாதனவாதிகளின் முழக்கங்களை உண்மையென நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வேதங்களைப் படிக்க மாட்டார்கள் என்ற துணிச்சலில் தானே இப்படியெல்லாம் சொல்ல முடிகிறது. வேதங்களில் மிக ம...