இடுகைகள்

மாரடைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உயிர் காக்க...

படம்
ஒரு பயிற்சி! எங்கு வேண்டுமானாலும்,யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம். ஒருவர் நெஞ்சு வலி என்று மார்பைப் பிடித்துக் கொண்டதுமே,  அதை வாயுக்கோளாறு என்று நினைத்துக் கொள்கிறோம். வாயுக்கோளாறுக்கு நமக்குத் தெரிந்த மருத்துவத்தைச் சொல்கிறோம். செய்கிறோம். மாரடைப்பின் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டிருந்தால், உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும்  ஆபத்தாகிவிடும்.' முதலில் எல்லாம் வயதானவர்களுக்குத்தான் மாரடைப்பு வந்தது. இப்போது சிறுவர்களுக்கே மாரடைப்பு வந்துவிடுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நெஞ்சு வலி வந்தால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு தேவையான பரிசோதனைகள் செய்வார்கள். வாயுக்கோளாறா,  அசிடிட்டியா?  மாரடைப்பா?  எதனால் நெஞ்சு வலி என்பது உடற் பரிசோதனைக்குப் பிறகுதான் தெரிய வரும். அதற்குப் பின்பு உரிய மருத்துவம் செய்வார்கள். ஆனால் நாம் என்ன செய்கிறோம்?  நெஞ்சு வலி வந்தவருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்கிறோம். வாயுக் கோளாறு என்று நினைத்துக் கொண்டு சோட...