இவர் அவரில்லை ...?
வெளிவருவது இவரல்ல. பாகிஸ்தானின் உள்ளடி வேலைகளால் பஞ்சாப் மக்களின் மகிழ்ச்சியில் மிக குழப்பம். பாக் சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் வாடும் சரப்ஜித் சிங் விடுதலை என்று செய்தியை பாகிஸ்தான் வெளியிட்டது. சரப்ஜித் சிங் 1990 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டிருந்தார் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அந்தத் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 14 பேர் பலியானதாக பாகிஸ்தான் கூறியது. எனினும் தான் குற்றமற்றவர் என்றும், தவறுதலாக தான் கைது செய்யப்பட்டதாகவும் சரப்ஜித் சிங் தொடர்ந்து வாதாடி வந்தார். அவர் ஆயுள் தண்டனை காலத்தை நிறைவு செய்திருந்தால், அவரை விடுவிக்கும்படி அதிபர் ஸர்தாரி உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே பாகிஸ்தானின் சட்ட அமைச்சர் ஃபரூக் நேயக் அவரை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்தை கேட்டுள்ளார் எனவும் பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. சரப்ஜித் சிங் லாகூர் நகரிலுள்ள கொட் லக்பட் சிறைச்சாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளார். ...