கொலையே நிம்மதி தரும்?
சைல்சான் ஜோஸ் தாஸ் க்ரசாஸ் . பிரேசிலில் பொழுதுபோக்குக்காக 41 பேரைக் கொலை செய்த சைக்கோ கொலைகாரனை போலீ ஸார் கைது செய்துள்ளனர். அந்த கொலைகாரனுக்கு வயது 26. பிரேசிலில் வசித்து வருபவன் சைல்சான் ஜோஸ் தாஸ் க்ரசாஸ். இவன் ஒரு சைக்கோ. இவன் ரியோ நகரத்தில் உள்ள ஒரு புறநகர் பகுதி யில் ஒரு பெண்ணைக் கொலை செய்தான். அதைத் தொடர்ந்து போலீஸார் அவனைக் கைது செய்தனர். அவர்களின் விசாரணை யின்போது, தான் இதுவரை 41 பேரை ஜாலிக்காகக் கொலை செய்திருப்பதாகக் கூறியுள்ளான். அவர்களில் 37 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் அடங்குவர். இவன் கொலை செய்த பெண்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர் கள் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை அழுது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதால் அதைக் கொலை செய்தேன் என்று விசாரணையில் க்ரசாஸ் கூறியுள்ளான். போலீஸாரின் விசாரணையில் அவன் மேலும் கூறியதாவது: "ஆரம்பத்தில் சின்னச் சின்ன திருட்டுக்களைச் செய்து வந்தேன். என்னுடைய 17 வயதில் முதல்முறையாக ஒரு பெண்ணைக் கொலை செய்தேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதனால் தொடர்ந்து பெண...