பான்மசாலா குவிக்கும் லாபம்.
இந்த குட்கா,பாண் மசாலா தடையினால் ஒரே நன்மை ! இதன் வியாபார முக வர்களுக்கு லாபம் முன்பை விட பன்மடங்கு கூடியதுதான். மற்றபடி எல்லா கடைகளிலும் விற்பனையாகிக் கொண்டுதான் உள்ளது. அதிகாரிகளுக்கு தெரிந்தும்-தெரியாமலும். ஜெயா அரசு முன்பு விதித்த குட்கா தடை போல்தான் இப்போதும். ஒரு வேளை அரசே மது பானம் போல் குட்கா விற்பனையையும் கையில் எடுக்க போகிறதோ?என்னவோ? அரசு தடைகள் எல்லாமே தடை விதித்த அடுத்த மாதத்திலேயே காற்றில் பறக்கும் என்பதை குட்காவும் நிரூபித்துள்ளது. கடந்த மே மாதம் தமிழகத்தில் குட்கா, உண்ணக்கூடிய புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, சென்னை முழுவதும் அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். பெட்டிக்கடை முதல் மொத்த வியாபாரிகள் வரை சோதனை நடத்தி புகையிலை பொருட்கள், குட்கா விற்றவர்களுக்கு அபராதம் விதித்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆரம்பத்தில் அதிகாரிகள் கெடுபிடியாக இருந்ததால் புகையிலை பொருட்கள் விற்பனை கணிசமாக குறைந்தது. ஆனால், நாளாக நாளாக கள்ள சந்தையில் விற்பனைக்கு வந்தன. ரூ.2க்கு விற்கப்பட்ட குட்கா ரூ.20...