தமிழ் காமிக்ஸைப் புரட்டிப்போட்ட முத்து காமிக்ஸ்! தமிழில் காமிக்ஸ் என்றால் இரும்புக் கை மாயாவியைப் பற்றிப் பேசாமல் ஆரம்பிக்க முடியாது. இரும்புக் கை மாயாவியின் படத்தைப் பார்த்திராதவர்கள்கூட உச்சரிக்கும் மந்திரப் பெயராக அது புகழ்பெற்றிருக்கிறது. இரும்புக் கை மாயாவி ஏன் இப்படி கொண்டாடப்படுகிறது? மூன்று விஷயங்களை மட்டும் பார்ப்போம்: தமிழகத்தில் இரும்புக்கை மாயாவியின் சகாப்தம் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்துவருகிறது. இப்போதும்கூட அதன் மறுபதிப்பைத் தேடுபவர்கள் உண்டு. சினிமா இயக்குநர்கள் பிரபு சாலமன், மிஷ்கின், ஏ.ஆர். முருகதாஸ், சிம்புதேவன் உள்ளிட்டோர் தங்களுடைய சிறுவயது இன்ஸ்பிரேஷனாக மாயாவியையே குறிப்பிடுகின்றனர். # எழுபது, எண்பதுகளில் இரும்புக்கை மாயாவியைப் போலவே தங்கக் கை மாயாவி, இரும்பு விரல் மாயாவி, தங்க விரல் மாயாவி, உலோகக் கை மாயாவி, நெருப்பு விரல் சிஐடி என ஏகப்பட்ட 'போலச் செய்யும்' கதாபாத்திரங்கள் வந்ததில் இருந்தே, இரும்புக் கை மாயாவி எவ்வளவு பிரபலம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். # தொடர்ந்து வந்த கதைகள் மாயாவியின் ஆளுமை, தமிழகத்தில் நிலைத்து நிற்க உதவி...