சில முரண்கள்.....

ரேஷன் கடைகளைவிட இங்கே மதுக் கடைகள்தான் அதிகம் என்று பத்திரிக்கை நிரூபர்களுக்கு இயக்குனர் அமீர் ஆவேசத்துடன் பேட்டியளித்தார். தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, திருவிழா பொம்மைகளைப்போல் தெருவுக்கு வரும் அத்தனை சினிமா நட்சத்திரங்களையும் கண்டிப்பதாகவும் கூறினார்.
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க-வுக்காக ஓட்டு கேட்ட சிம்ரனும் சினேகாவும் இன்றைக்கு எங்கே போனார்கள்? காவிரி விவகாரத்தில் கைவிட்டவர்கள், ஒகேனக்கல் விவகாரத்தில் ஒதுங்கி நின்றவர்கள், இப்போது வாக்குகளைத் திரட்ட மட்டும் வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இத்தனை வருட காலத்தில் இந்த வடிவேலு எங்கே போய் இருந்தார்? விஜயகாந்த் உடனான பழைய பகையை மனதில்வைத்து அவரை வசை பாடினார் வடிவேலு. சொந்தப் பிரச்னைக்கும் சொத்துத் தகராறுக்கும் அரசியல் களத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது சகிக்க முடியாத அவலம்.
இந்தத் தேர்தல் களத்தில் சீமானின் எழுச்சிமிகு பேச்சு தொடங்கி, வைகோ-வின் மௌனம் உட்பட, அனைத்து அரசியல் தலைவர்களின் பேச்சையும் நான் கூர்ந்து கவனித்தேன். வடிவேலு அளவுக்கு யாரும் கேவலமாகவோ கீழ்த் தரமாகவோ பேசவில்லை. குடிக்கிறவன் கெட்டவன் என்றால், அதை விற்கிறவன்? இதைக் கேட்பதால் நான் யாரையோ ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம். இரு கட்சிகளுமே மதுக் கடை விஷயத்தில் ஒரே கொள்கையோடுதான் இருக்கின் றன.
அரசே நடத்தும் மதுக் கடையில், அரசு நிர்ணயித்த விலையைக் கொடுத்து, மது குடிப்பதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்? தவறுன்னா, ஏன் அர சாங்கமே அந்தக் கடைகளைத் திறந்து வெச்சிருக்கு? ரேஷன் கடைகளைவிட இங்கே மதுக் கடைகள்தான் அதிகம்!'' என்று ஆவேசத்துடன் பேசினார் இயக்குனர் அமீர்.
ண்ணன் அமீருக்கு என்னவாச்சு என்று பார்க்கிறீர்களா/ ?ஒன்றும் இல்லீங்க.அவருக்கும் அரசியல்பொபியோ  வந்துட்டு.கொஞ்ச காலத்துக்கு முன் இயக்குனர் சீமானுடன் இலங்கைத்தமிழர் பற்றி பேசினார்.சீமான் புழலுக்குள் போனார்.அமீர் தப்பித்தோம்,பிழைத்தோம் என்று வாயை மூடிக்கொண்டிருந்தார்.இப்போ மறுபடி என்னவானது என்று தெரியவில்லை.வாயைத்த்றந்து விட்டார்.
வடிவேலுவே இப்படி கலக்கிட்டாரே நாம என்னக்குறைச்சலா என்ற உயர்வு மனப்பான்மையாகக்கூட இருக்கலாம்.வடிவேலுவை இத்தனைக்காலம் எங்கே போயிருந்தார் எனக் கேட்கும் இவர் இதுவரை எங்கேபோயிருந்தார்.வடிவே லு அரசியலில் விஜயகாந்தை எதிர்த்து பிரசாரம் செய்வேன்.அவரை ஜெயிக்க விட மாட்டேன்  என்று அவர்களின் மோதலில் கூறியவர்தான்.அதன் அடிப்படையில் தான் அவர் பரப்புரையும் அமைந்தது.மற்றவர்களை அவர் தாக்கவில்லை.அவர் உணர்வு எல்லோருக்கும் புரிந்தது.அமீருக்குப் புரியாதது எப்படி? மது அருந்தியவரை தாக்கிப்பேசினால் இவருக்கு கோபம் வருவானேன். அதற்கு ஏன் வடிவேலுவைத்தாக்குகிறார்.இவரும் ஆப்பு அடித்துவிட்டு ஆப்பு வைக்கவந்துள்ளாரா?மதுக்கடைதிறப்பு தவறுதான்.அதற்காக ஒரு முதல்வர் நாற்காலி கனவுக்காரர் பொது இடங்களில் மது அருந்திவிட்டு தனது வேட்பாளரையேத்தாக்குவதும்,குடி போதையின் உச்சத்தில் தப்புத்தப்பாக பேசுவது சரி என்கிறாரா அமீர்.ஏன் பாலிடாலும்,பக்டோனும் கடையில் விற்கிறான். ஹார்லிக்சும் ,பாலும் விற்கிறான் .அமீர் எதைவாங்கிக்குடிப்பார்.
      அமீர் ராம்,பருத்திவீரன் காலதில் எதிர்பார்த்ததை இப்போது எதிர் பார்ப்பது தப்புதான்.அவர்தான் இப்போது படங்களில் ஒரு பாடாலுக்கு குத்தாட்டம் போடு நிலைக்கு வந்து விட்டாரே.
அடுத்து அரசியல் தான்.அதுவும் விஜய்காந்த் கடையாக இருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.

 
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
மகாராஷ்டிரா, பிகார், ஒரிஸா மாநிலங்கள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிப்பு
இது ஒரு இந்தியா
ஒரு பக்கம் உணவு தானியக் கிடங்குகள் நிரம்பி வழியும் நிலையில், இன்னொரு புறம் பட்டினிச் சாவுகளை அரசு தடுக்க முடியாமல் இருப்பது ஏன்?  இ்ந்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வி
 பொது விநியோகத் திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பான மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பினார்கள்.
இந்த ஆண்டு அமோக விளைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், உணவு தானியக் கிடங்குகள் நிரம்பி வழிவதாகவும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும் அரசு சொல்கிறது.
’தானியக் கிடங்குகள் நிரம்பி வழியும்போது, இன்னொரு பக்கம் மக்கள் பட்டினியால் தவிப்பத்தால் என்ன பயன் இருக்கப் போகிறது? ஒரு நாட்டுக்குள் இரண்டு வகையான இந்தியர்களைக் கொண்டிருக்க முடியாது’ – என்று நீதிபதி தல்வீர் பண்டாரி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங்கிடம் கேள்வி எழுப்பினார்.
மில்லேனிய அபிவிருத்தி இலக்குகள்
மில்லேனிய அபிவிருத்தி இலக்குகள்
, மூத்த வழக்கறிஞர் கொலின் கொன்சால்வஸ் கூறும்போது, ஐ.நா. மன்றத்தின் மில்லேனிய அபிவிருத்திக்கான இலக்குகளுக்கான பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டிருந்தாலும், நாட்டில் பட்டினிச் சாவுகள் தொடர்வதாக சுட்டிக்காட்டினார்.
பட்டினிச் சாவைத் தடுக்க, கடுமையாக பாதிக்கப்பட்ட 150 மாவட்டங்களுக்கு உடனடியாக உணவுப் பொருட்களை அனுமதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
மகாராஷ்டிரம், பிகார், ஒரிஸா போன்ற சில மாநிலங்களில் ஊட்டச்சத்துக் குறைவு பிரச்சினை அதிகரித்து வருகிறது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
14000 கோடியை அம்பானி,டாடா,வேதாந்தா போன்ற பகாசுர பணக்கார நிறுவனங்களுக்கு வரித்தள்ளுபடி செய்யும் இந்திய காங்,அரசு ஏழைகளின் வயிற்றக்கழுவும் உணவு பொருட்கள் கிடங்குகளில் வீணானாலும் மானியமாகத்தர மாட்டேன் என அடம் பிடிக்கிறது.
 இதனால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடுமாம்.மக்களின் ஏழ்மையைப் போக்காத பொருளாதாரம் நமக்குத்தேவையா? இதைக்கூறும் மன்மோகன்சிங் பெரிய பொருளாதாரப் புலியாம்,மேதையாம்.அமெரிக்கா பாராட்டுகிறது.
 சூட்சுமக்கயிறின் இருப்பிடம் தெரிகிறதா?
==============================================================================
இந்த வரைபடம் என்ன என்றுதெரிகிறதா?

image showing the route of the royal wedding


இன்னும் நான்கு நாட்களில் நடை பெறவுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேத்தி மணவிழா ஊர்வல வரைபடம்.அரசு வெளியிட்டுள்ளது.

முந்தைய   அரச திருமணங்கள்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?