14 நாடுகளை கடக்கும் நெடுஞ்சாலை
ஒரு வளைவு கூட கிடையாது... 14 நாடுகளை கடந்து செல்லும் உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை எங்க இருக்கு தெரியுமா? ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் நமக்கு பிடித்த பாடலை கேட்டபடி வாகனத்தில் செல்வது எவ்வளவு ரம்மியமாக இருக்கும். இதுபோன்ற பயணங்களை அனுபவிக்க விரும்பும் நபர்களுக்கு ஏற்ற நெடுஞ்சாலை ஒன்றைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம். பான்-அமெரிக்க நெடுஞ்சாலை என்பது மெக்ஸிகோ, குவாத்தமாலா, எல் சால்வடார், ஹோண்டுராஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா மற்றும் பனாமா போன்ற வட அமெரிக்காவின் முக்கிய நாடுகளின் வழியாக செல்லும் தொடர்ச்சியான பாதை ஆகும். இது கொலம்பியா, ஈக்வடார், பெரு, சிலி மற்றும் அர்ஜென்டினா போன்ற தென் அமெரிக்க நாடுகளின் வழியாகவும் செல்கிறது. இந்த நெடுஞ்சாலை பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறது. குறிப்பாக, பான்-அமெரிக்க நெடுஞ்சாலை உலகின் மிக நீளமான மோட்டார் சாலையாக கின்னஸ் புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையாக கருதப்படும் இந்த பான்-அமெரிக்க நெடுஞ்சாலை பற்றிய அனைத்து விவரங்களையும் இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். அலாஸ்காவின் ப்ருதோ பேயிலிருந்து தொடங்கும்...