"காமன்வெல்த் "?

இப்போது காமன் வெல்த் அமைப்பு பற்றி அதிகமாக பேசப்படுகிறது.அதில் நமது பிரதமர் கலந்து கொள்வது பற்றி கூட இலங்கைக்கு எதிரான குரல்கள் உள்ளன. சரி.இப்போது காமன் வெல்த் அமைப்பு என்றால் என்ன? அதன் ஆரம்பம் எவ்வாறு?ஏற்கனவே சார்க்,ஐ.நா,என்று பல உள்ளது .அவைகளால் ஒன்றுமே நடவாத போ து இந்த காமன்வெல்த் எதற்கு? கொஞ்சம் பார்ப்போம். உலக வரலாற்றில் நீடித்த பேரரசுகளில் மிகப்பெரியதும் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாகஆதிக்கம் செலுத்தியதுமான பிரிட்டிஷ் பேர ரசு உலக நிலப்பரப்பில் 25 விழுக்காட்டை விழுங்கி யிருந்தது .1887ல் இருந்து துவங்கிய பிரிட்டன் மற்றும் காலனிய பிரதமர்கள் பங்கேற்ற கூட்டங்கள் 1911 முதல் பேரரசு சார்பு மாநாடுகள் (இம்பீரி யல் கான்பெரன்ஸ்) என்று அழைக்கப்பட்டன. பிரிட் டிஷ் பேரரசு என்பதை மாற்றி பிரிட்டிஷ் காமன் வெல்த் நாடுகள் என்று அழைக்க 1917ல் ஜான் ஸ்மட்ஸ் முன் மொழிந்தார். இந்த மாற்றம் 1921ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1926ல் நடைபெற்ற பால்பர் இம்பீரியல் மாநாட்டில் இதிலுள்ள அமைப்புகளுக்கு சம உரிமையும் கூடவே உள் நாட்டு, அயல் விவகாரம் ஆகிய அம்சங்களில் ஒருங்கிணைப்பும் உறு...