தனியே அவற்கொரு
மருந்து மாபியா மருத்துவர்கள் சிறப்பு மருத்துவர்கள் சங்கத்தால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை சில மருத்துவர்கள் பரிந்துரைப்பதால், புற்று நோயாளிகள் பெரும்பாலும் தனியார் துறையிலிருந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளது என்று மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார். புற்று நோயாளிகளுக்கு தேவையற்றவை என சிறப்பு மருத்துவர்கள் சங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து களின் பட்டியல் இருப்பதாகவும், அந்த மருந்துகள் மருத்துவ வழங்கல் பிரிவால் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். பட்டியலில் இல்லாத மருந்தை ஒரு மருத்துவர் பரிந்துரைக்கும்போது, நோயாளிகள் அதை தனியார் துறையிடமிருந்து வாங்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார். புற்றுநோய் நோயாளிகளுக்குத் தேவையான சில மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை என்ற புகார்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக விஜேசூரிய இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். சுகாதார அமைச்சகம் மொத்தம் 865 வகையான மருந்துகளைப் பதிவு செய்திருந்தாலும், அவற்றில் 285 மட்டுமே உள்ளூரில் உற்பத்...