"மிரட்டல் ஆயுதம் செல்லுபடியாகுமா?"
கருணாநிதி மத்திய காங்கிரசை மிரட்ட ஆட்சியில் இருந்து விலகுவோம் என்றிருக்கிறார். அவரிடம் எப்போதும் இருக்கும் கடைசி மிரட்டல் ஆயுதம் அதுதான் .ஆனால் அது இப்போதைக்கு காங்கிரசு ஆட்சி கவிழுமளவு செல்லுமா?என்று பார்த்தால் இல்லை. இந்தியாவின் மொத்த எம்.பி.,க்கள் எண்ணிக்கை- 544. ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை பலமாக 273 எம்.பி.,க்கள் தேவை. காங்கிரசுக்கு சொந்தமாக 206 எம்.பி.,க்கள்முன்பு இருந்தனர். குஜராத்தைச் சேர்ந்த, ஒரு எம்.பி., காலமாகி விட்டதால், பலம் 205 ஆக குறைந்துவிட்டது . தி.மு.க. தவிர்த்து மற்ற கட்சிகள் ஆதரவு எம்.பி.,க்கள் 68 . இதுதவிர ஒன்பது சுயேச்சை எம்.பி.,க்களும், ஆதரவு தருகின்றனர். இந்த கணக்குப்படி பார்த்தால் சோனியாவின் காங்கிரசுக்கு ஆதரவு தரும் எம்.பி.,க்கள் எண்ணிக்கை278 ஆக உள்ளது.பெரும்பான்மையை விட 5 அதிகம். தி.மு.க.வின் 18 மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒருவர் என 19 எம்.பி.,க்கள் தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றாலும் கூட மத்திய அரசு நம்பிக்க...