முதுமையில் இளமை
திருப்பரங்குன்றம் மலை யை பாதுகாக்க வலியுறுத்தி, சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தக்கோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உத்தரவிடக் கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் யுவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "யாத்திரைக்கு மனுதாரர் கேட்கும் வழித்தடம் நெருக்கடியான போக்குவரத்து நெரிசல் நிறைந்தது. சாலை. ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூகவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல” என்று வாதிட்டார். மேலும் வாதிட்ட அவர், "இஸ்லாமியர்கள் அவர்களுடைய இடத்தில் வேண்டுதலுக்காக ஆடு, கோழி பலியிடுவது வழக்கம். திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கூட ஆடு, கோழிகளை பலியிடுவது வழக்கம். காலங்காலமாக திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மக்கள் இந்து, முஸ்லிம் மற்றும் ஜெயின் ஆகியோர் மத வேறுபாடின்றி ...