முதுமையில் இளமை
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தக்கோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உத்தரவிடக் கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் யுவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "யாத்திரைக்கு மனுதாரர் கேட்கும் வழித்தடம் நெருக்கடியான போக்குவரத்து நெரிசல் நிறைந்தது. சாலை. ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூகவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல” என்று வாதிட்டார்.
மேலும் வாதிட்ட அவர், "இஸ்லாமியர்கள் அவர்களுடைய இடத்தில் வேண்டுதலுக்காக ஆடு, கோழி பலியிடுவது வழக்கம். திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கூட ஆடு, கோழிகளை பலியிடுவது வழக்கம்.
காலங்காலமாக திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மக்கள் இந்து, முஸ்லிம் மற்றும் ஜெயின் ஆகியோர் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையை காரணம் காட்டி, தேவையற்ற கலவரங்களை உருவாக்கி மக்களின் ஒற்றுமை குலைந்து விடக்கூடாது. தமிழ்நாடு மத நல்லிணத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் பெயர்பெற்றது.
மத நல்லிணக்கத்தை காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் ஒவ்வொருவரின் மத நம்பிக்கையை பாதுகாப்போம் என்றும் யாருடைய மத வழிபாட்டிலும் அரசு தலையிடாது என்றும் உறுதிபட தெரிவித்தார். யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் அது தேவையற்ற விரும்பத்தகாத பிரச்னைகளை உருவாக்கும்" என தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், யாத்திரை நடத்த கேட்டுள்ள வழித்தடத்தில் நெரிசல் ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் மலை பிரச்சனைக்காக சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன் என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினார். தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர். பிறகு மனு மீதான உத்தரவை தள்ளிவைத்துள்ளார்.
ஆர்.யன். ரவிக்கு
12 வினாக்கள்?
2020-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா உள்பட 12 மசோதாக்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பதற்கு எதிராக, 2023-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடா்ந்தது.
அந்த வழக்கின் விசாரணை நீண்டகாலமாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்டு விசாரணையை நிறைவு செய்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், தற்போது அந்த வழக்குத் தொடர்பாக 12 கேள்விகளை முன்வைத்துள்ள உச்ச நீதிமன்றம் அடுத்த ஒரு வாரத்திற்குள் தமிழ்நாடு அரசும், ஆளுநர் தரப்பும் எழுத்துப்பூர்வ பதில் தர உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றக் கேள்விகள்:
- மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை மாநில அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பிய பிறகு, மீண்டும் அதே மசோதாவை மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும்போது அதை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாமா?
- அனைத்து வித மசோதாக்களையும் குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆனுப்பலாமா?
- மாநில அரசின் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் தன் அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா, அல்லது ஆளுநர் ஒரு குறிப்பிட்ட அளவு தனது தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்து அதைப் பயன்படுத்தலாமா?
- “பாக்கெட் வீட்டோ” என்ற கருத்து என்ன? இது அரசியலமைப்புச் சட்டத்தின் 111, 200 மற்றும் 201 விதிகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளதா?
- பரிந்துரையின்போது அமைச்சரவை ஆலோசனையை ஆளுநர் கேட்க வேண்டுமா? தனித்து செயல்படலாமா?
- மசோதா மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் எனக் கூற முடியுமா?
- குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் மசோதா மீது ஒப்புதல் தருவது அவசியமா? அவசியம் இல்லையா?
- அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் 4 நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதா?
- மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு ஒப்புதல் பெறுவதற்கு முன்வைக்கப்பட்டால், ஆளுநர் ஒப்புதல் வழங்கியே ஆக வேண்டும் என்பது கட்டாயமா?
- ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதலை நிறுத்திக்கொண்ட பிறகு, மாநில சட்டமன்றம் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு முன்வைத்தால், அது மசோதாவின் புதிய நிறைவேற்றமாக கருதப்படுமா?
- குடியரசுத் தலைவரால் மசோதா நிராகரிக்கப்படும்போது எழும் சூழலை அரசியலமைப்பு மூலம் கையாள்வது எப்படி?
உள்ளிட்ட 12 கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது.
முதுமையில் இளமை
ஞாபக மறதி பிரச்சினையால் முதியவர்கள் மட்டுமின்றி இளைய தலையினரும் அவதிப்படுகிறார்கள். முக்கியமான விஷயங்களை கூட சட்டென்று நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். ஏன், காய்கறி கடைக்கு சென்று 6 காய்கறிகளை வாங்கி வரச்சொன்னால், கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு பொருட்களை மறந்து விடுவோம் அல்லது குழப்பம் ஏற்படும். சின்ன சின்ன விஷயங்கள் தொடங்கி முக்கியமான விஷயங்களில் பலவற்றை மறக்கும் நாம், நினைவாற்றலை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நினைவாற்றல் திறனை ஒருங்கிணைப்பதற்கு தூக்கம் அவசியமானது. அறிவாற்றலை மேம்படுத்தவும், மூளையை புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கவும், தினசரி நிம்மதியான 7 மணி நேரம் தூக்கம் அவசியம்.
பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சென்ற பிறகு, இனி கற்றுக்கொள்வதற்கு என்ன இருக்கிறது?
என்ற மனநிலை பலருக்கும் இருக்கிறது. அந்த மனநிலையை தூக்கி எறிந்து, வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள். மாறும் காலகட்டத்திற்கு ஏற்ப உங்களை மெருகேற்றிக்கொள்ள கற்றல் மட்டுமே கைகொடுக்கும்.

கற்றல் ஆர்வம் மூளையின் செயல்பாடுகளை தூண்டி மனதை கூர்மையாக வைத்திருக்க உதவுவதோடு, அறிவாற்றல் திறனையும் அதிகரிக்க செய்கிறது என்கிறது ஹார்வேர்டு ஹெல்த் இதழ். புதிய விஷயங்கள் கற்றுக்கொள்வதால் என்ன பலன் என்று கற்றுக்கொள்ள தயாங்காதீர்கள்.
நீங்கள் இன்று கற்கும் ஒரு விஷயம் பல ஆண்டுகளுக்கு பின் கூட ஏதோ ஒரு வகையில் நிச்சயமாக உதவும்.
நீங்கள் ஏதாவது ஒன்றைக் கற்றுகொள்வதில் அதிக புலன்களை பயன்படுத்தினால் உங்கள் மூளையின் பகுதி நினைவாற்றலைத் தக்கவைத்துக்கொள்வதில் அதிக ஈடுபாடு கொள்ளும். உதாரணத்திற்கு, உணவகத்தில் புதிய உணவை உட்கொள்ளும் போது, அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை ருசித்து கண்டுபிடிப்பதை விட நறுமணத்தை வைத்து கண்டுபிடிக்க முயற்சியுங்கள். இந்த செயலில் இரண்டு புலன்கள் பயன்படுத்தப்படுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
தினசரி உடற்பயிற்சி போன்ற உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், மூளையின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். இதயத்தை பம்ப் செய்ய தூண்டும் பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள்.
நீச்சல், சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உடற்பயிற்சி செய்ய போதிய நேரம் இல்லை என நினைப்பவர்கள் நடைப்பயிற்சியாவது தினமும் செய்யுங்கள்.
மூளை ஆரோக்கியத்திற்கும் நினைவாற்றலை மெருகேற்றுவதற்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். காய்கறிகள், பழங்கள், மெலிந்த புரதங்கள், மீன்கள், முழு தானியங்கள் உள்ளிட்டவை மூளையின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. இவை மூளை ஆரோக்கியத்திற்கு பங்களித்தால், சில உணவுகள் கேடு விளைவித்து வயதாகும் போது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள் மூளையின் செயல்பாட்டிற்கு எதிரானவை. எனவே, இவற்றை தவிர்ப்பது நல்லது.
யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம் மூலம் மன அழுத்தத்தை நிர்வகியுங்கள். எந்த ஒரு செயலிலும் தொடர்ந்து ஈடுபடுவதையோ அல்லது ஒரே சமயத்தில் பல பணிகளை மேற்கொள்வதையோ தவிருங்கள். குறிப்பிட்ட நேரம் இடைவெளி எடுத்துக்கொள்வது முக்கியமானது. ஒரு விஷயத்தை பதற்றத்துடன் அல்லது மன அழுத்தத்துடன் எதிர்கொண்டால் நிச்சயமாக நினைவில் தங்காது. எனவே, நினைவாற்றல் மற்றும் மன தெளிவை பாதுகாக்கும் வகையில், கவனம் செலுத்துங்கள்.
செஸ் விளையாட்டு, புதிர் கணக்குகள் என மூளைக்கு சவால் விடும் செயல்பாடுகளுக்கு சில நிமிடங்களையாவது செலவிட வேண்டும்.
புதிய தனித்திறன்களை கற்றுகொள்வது, வாசிப்பு பழக்கத்தை பின்பற்றுவது, மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கச் செய்யும் விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் மூளை சுறுசுறுப்பை தக்க வைக்கலாம்.