இடுகைகள்

வறுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வறுமை ஒழிப்பு தினம்

படம்
 உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. பின் ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.  வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. இந்தாண்டு "பாகுபாடின்றி வறுமையை ஒழிப்பது' என்பது இத்தினத்தின் மையக்கருத்து.  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர், சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் தான் உலக வறுமை ஒழிப்பு தினம்  உருவாக்கப்பட்டது.  உலக மக்கள் தொகையில் 129 கோடி பேர் முற்றிலும் வறுமை நிலையில் வாழ்கின்றனர். இதில் 40 கோடி பேர் இந்தியாவிலும், 17 கோடி பேர் சீனாவிலும் உள்ளனர். இந்தியாவில் 32.7 சதவீதம் பேர், சர்வதேச வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர் 2008ல் "உலக வங்கி' நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஏழ்மை நிலையில் தள்ளப்படுவதற்கு அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது என பல்வேறு காரணங்கள் உள்ளன....