வறுமை ஒழிப்பு தினம்
உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. பின் ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.
வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. இந்தாண்டு "பாகுபாடின்றி வறுமையை ஒழிப்பது' என்பது இத்தினத்தின் மையக்கருத்து.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர், சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் தான் உலக வறுமை ஒழிப்பு தினம் உருவாக்கப்பட்டது.
உலக மக்கள் தொகையில் 129 கோடி பேர் முற்றிலும் வறுமை நிலையில் வாழ்கின்றனர். இதில் 40 கோடி பேர் இந்தியாவிலும், 17 கோடி பேர் சீனாவிலும் உள்ளனர். இந்தியாவில் 32.7 சதவீதம் பேர், சர்வதேச வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர் 2008ல் "உலக வங்கி' நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஏழ்மை நிலையில் தள்ளப்படுவதற்கு அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது என பல்வேறு காரணங்கள் உள்ளன.
ஏழ்மை நிலையில் இருப்பவர்களை, ஒரே நாளில் வசதியானவர்களாக மாற்றிட முடியாது. ஆனால், இப்போதிருந்து பல தொலைநோக்கு திட்டங்களை தீட்டினால், வரும் சந்ததியினரும் தொடர்ந்து வறுமைக் கோட்டிலேயே வசிப்பதை தவிர்க்கலாம். கல்வி வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிக்கலாம்.
அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தான உணவு, மருத்துவம், வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உடை, இருப்பிடம் என அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும். இவை இல்லாத அனைவரும், வறுமை நிலையில் இருப்பவர்கள் என கருதப்படுவர். பட்டினி மற்றும் வன்முறைக்கு வறுமை வழி வகுக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை வறுமையில் இருந்து அரசியலுக்கு வந்த தலைவர்கள் பலர் வறுமையை ஒழிக்க அயராது பாடுபட்டு சுவிஸ் வங்கியில் கணக்கு வைக்கும் அளவு சாதனை செய்துள்ளார்கள் .ஆனால் அவர்கள் தங்களது வறுமையை மட்டுமே ஒழிக்க முயற்சி செய்து வென்றுள்ளனர் .இதுதான் இந்திய வறுமையின் நிலை.
இந்திய வறுமையை ஒழிக்கும் தலைவர்களுக்கு கடுமையான வறுமை ஏற்பட்டுள்ளதுதான் இந்தியாவின் சோகம்.
கடைசி தகவல் :
சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கிய இந்தியர்களின் பட்டியல் அந்த வங்கியின் ஆதாரங்களில்இருந்து சுமார் 700 இந்தியர்கள் மட்டும் ரூ.12 ஆயிரத்து 740 கோடிக்கு கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.ஆனால் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 80000 என தெரிகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------==================================================
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சீக்ரெட் வில்லேஜ்':
------------------------------------------------------------------------------------------------------------------------------------==================================================
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சீக்ரெட் வில்லேஜ்':
------------------------------
தமிழனின் ஹாலிவுட் படம்.
--------------------------------------
இந்திய வம்சா வழியைச் சேர்ந்த தமிழர் சுவாமிகந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள "தி சீக்ரெட் வில்லேஜ்' என்ற ஹாலிவுட் படம், தமிழ் உள்பட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
சுவாமிகந்தன் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, அமெரிக்காவில் செட்டில் ஆனவர். அங்கு திரைப்படத் தயாரிப்பு, விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் திரைப்பட மார்க்கெட்டிங் பற்றிய படிப்பை நியூயார்க் பல்கலைக் கழகத்திலுள்ள ஃபிலிம் ஸ்கூலில் படித்தவர். இவர் இயக்கத்தில் முதன் முதலாக 2008இல் வெளிவந்த "கேட்ச் யுவர் மைன்ட்' என்ற படம் பரவலாக இவரை அறிமுகப்படுத்தியது.
சுவாமிகந்தன் இயக்கும் இரண்டாவது படம்தான் "தி சீக்ரெட் வில்லேஜ்'. இப்படம் திரில்லர் படமாகும். அக்டோபர் மாதம் இப்படம் உலகம் முழுவதும் வெளிவர இருக்கிறது. தமிழனின் ஹாலிவுட் படம் வெற்றி பெறட்டும்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------