ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சுடுகாடு
ஜூலை 1 ம் தேதி முதல் ஜி . எஸ் . டி வரி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது . இந்த ஜி . எஸ் . டி யை முன்வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விளக்கங்கள்,கருத்துக்கள் இந்தியா முழுக்க வலம் வருகிறது. வெளிப்படையாகவே இந்தவரி விதிப்பு அதாவது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி (G.S.T )விதிப்பு கண்டிப்பாக ,உண்மையாக பொது மக்களுக்கு எதிராக சுமையை தரும் என்பதும்,கார்பரேட்களுக்கு பணம் கொட்டும் சலுகைகளுமாகத்தான் இருக்கும் என்பதில் மட்டும் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்கு மோடி கொண்டுவரும் சீர் திருத்தங்கள் எல்லாமே நடுத்தரவர்க்கம் வரை கொடுமைகளை தரும் விளைவுகளைத்தான் உள்ளடக்கியுள்ளது.பண மதிப்பிழப்பு,மாட்டு இறைச்சி,அரசுக்கு பணத்தை அள்ளித்தரும் பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவது என எல்லாமே. காங்கிரசு கொண்டுவர முயற்சித்து வரி விதிப்பு பற்றி யோசித்து தாமதமாகி பாஜக மோடியால் கொண்டுவரப்பட்டுள்ளது.மோடி அரசின் பணக்கார நலன் இந்த வரி விதிப்பில் அங்கங்கே வெட்ட வெளிசசமாகிறது. பீட்சாவுக்கு 5%,கடலை மிட்டாய்க்கு 18% கார்கள் விலை 2 லட்சம் வரை குறைவு எல்லாம்தான் அந்...